பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, எனப் பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள் "தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ்நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்' என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப் பெற்று, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தாரின், "புலவரேறு' பட்டம், தமிழக அரசின், "திரு.வி.க. விருது”, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின், "தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் போன்ற சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர்களின் தமிழ்ப் பணி', பொன்விழாக் கண்ட பெருமை யினையுடையது. - I SB N-81–85703-20-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/136&oldid=888864" இலிருந்து மீள்விக்கப்பட்டது