பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயர்பாடி அணிவிளக்கு

ஆழ்வார்கள் மனத்தைக் கவர்ந்த நேர்த்தியும் இவற்றை அவர்கள் தம் பாசுரங்களில் குறிப்பிட்ட அழகும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. எல்லா வற்றையும் எடுத்துக்காட்ட இயலாவிடினும் ஒரு சில வற்றை மட்டிலுமாவது ஈண்டுக் குறிப்பிடுவோம். அவற்றில் ஆழங்கால்படுவது ஒருவித பகவதநுபவம் ஆகும் அல்லவா?

வெண்ணெய் உண்ட வரலாறு : இந்த வரலாறு பல நிகழ்ச்சிகளைக் கொண்டது. வெண்ணெய் களவு செய் கின்ற தன்னை யசோதைப் பிராட்டி அடிக்கடி தாம் பினால் கட்டி வருத்துகின்றாள் என்று கண்ணன் இல்லத் திலுள்ள கயிறுகளையெல்லாம் துண்டு துண்டாக அறுத்து வைத்திடுவன். யசோதைப் பிராட்டி அவற்றை ஒன்றோ டொன்று முடி போட்டு ஒரு கயிறு வடிவமாக்கி அதனைக் கொண்டு கண்ணனைக் கட்டுவள். முடிச்சுகள் உடலை உறுத்தி வருத்துமே என்றும் வருந்துவள். இதனை மதுர கவிகள்,

‘கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் மண்ணிய பெருமாயன்.”

என்று அநுசந்திக்கின்றார். இவர் குருகூர் நம்பி நம்மாழ் வாரைத் தவிர வேறு தெய்வத்தை அறியாத குருபக்தர்.

பல சிறு துண்டுக் கயிறுகளை முடிபோட்டு ஒரு பெரிய கயிறாக்கினமைபற்றித் தாம்புக்குக் கண்ணி என்ற அடைமொழி வந்தது. நுண், சிறு என்ற அடைமொழி கள்தாம் பின் சுற்றளவிலும் நீட்டளவிலுமுள்ள சிறுமை யைக் காட்டும். இப்படிப்பட்ட தாம்பினால் கட்டும் போது தன் உடலுக்கு நீளம் போதாத அச்சிறு கயிற் றினால் தன்னைக் கட்ட முடியாதபடித் தன்னைத் தப்பு வித்துக் கொள்ளலாமாயினும் தனது செளலப்பியம்,

8. கண்ணிநுண்-1