பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்ட நாதன் 177

(திரைத்து-கிளர்ந்து, தரங்கம்-அல்ை அடங்குதல்சாந்தமாதல்; நிற்பவும்-நிலைத்தினைப் பொருள் களும்; திரிபவும்-இயங்குதினைப் பொருள்களும்: நின்னுளே-உன் சொரூபத்திற்குள்ளே, நீர்மைதன்மை; நின்கண்ணே-உன் பக்கலில்; நின்றதுஉள்ளது.) அலை எறிவு ஒய்ந்து கிடந்த கடல் காற்று வீசுதால் எங்கும் அலையெறியப்பெற்று மீண்டும் காற்று ஒய்ந்த தும் அவ்வலையெறிவு அடங்கிக் கடல் சாந்தமாவது போல, பகவத் சங்கல்ப்பம் உண்டாகும்போது நிலைத் திணைப் பொருள்களும் இயங்குதினைப் பொருள்களும் உள்ள பிரபஞ்சங்கள் தோன்றுதலும், அஃது இல்லாத பொழுது அவை அழிதலுமான நிலைகளையடைந்து இறுதியாக எம்பெருமானிடமே சேர்கின்றன என்பது ஆழ்வார் தெரிவிக்கும் கருத்தாகும்.

மீண்டும் நம்மாழ்வார் பாசுரத்திற்கு வருவோம். ‘தன்னில் மூவர்...முற்றுமாய்” தன்னுடைய சங்கல்ப்ப மாகிற சொரூபத்திலே மூவராக நின்றவர்கள் பிரமன், இவன், இந்திரன். இவர்களுடன் தேவர்கள், சனகாதி முனிவர்கள், நிலைத்திணைப் பொருள்கள், இயங்கு தினைப் பொருள்கள், இன்னமும் சொல்லப் பெறாதவை கள் ஆகியவற்றை உண்டாக்குகைக்காக, மூவர் முதலாய வானோர்.பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றும் தன்னில் ஆய்’ என்று கொண்டு கூட்டி பிரமன், சிவன், இந்திரன் முதலான தேவர்கள் முதலான எல்லாமும் தானே யாகி என்றும் உரைக்கலாம். கப்பும் கிளையுமான மரம் ஒரு சிறிய விதையினுள் சூக்குமமாக உள்ளது என்ற கொள்கைப்படி காரிய நிலையில் பருஉருவ நிலையில் தெரிகின்ற எல்லாப் பொருள்களும் காரண நிலையில் சூக்கும உருவமாக உள்ளனவாதலின், இங்ஙனம் சொல்லு வதில் தவறு இல்லை. இதனால் முன் இரண்டு அடிகளிலும் எம்பெருமானுடைய காரண நிலை கூறப்பெற்றதாகக் கொள்ள வேண்டும்.

12 --33