பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#0 வடநாட்டுத் திருப்பதிகள்

பகழி-அம்பு, வெருவி-அஞ்சி; புனம்-கொல்லை; வ்ேழம்-யானை, விசும்பு-ஆதாயம்; மீன்-நட்சத் திரம்; அசுரர்கோன்-இரணியன்; உகந்தான்மகிழ்ந்தான்.)

என்பது பொய்கையாழ்வார் காட்டும் சொல்லோவியம்.

பேயாழ்வார் காட்டும் யானையோ ‘ஆதிமூலமே!’ என்று ஒலமிட்டழைத்த கஜேந்திரன் மரபு வழி வந்தது போலும். இது புரியும் வழிபாட்டுச் செயலை ஒரு சமக காரம் பொலியப் பேசுகின்றார் ஆழ்வார். வழி பாட்டுக்குச் செல்லும் அடியார்கள் வாய் கொப்பளித்துக் கைகால்களை நீரால் கழுவித் தாய்மை செய்து கொண்டு மலர்களை எடுத்துப்போவது வழக்கமாகும். திருமலையி லுள்ள ஆண் யானை யொன்று இந்நெறியை மேற் கொள்ளுகின்றது. இக்காட்சியினை ஆழ்வார்.

“புகுமதத்தால் வாய்பூசிக்

கீழ்தாழ்ந்து அருவி உகுமதத்தால் கால்கழுவிக்

கையால்-மிகுமதத்தேன் விண்டமலர் கொண்டு

விறல்வேங் கடவனையே கண்டு வணங்கும் களிறு'17 (புகு-வாயில் புகும்; வாய்பூசுதல்-கொப்பளித்தல்; மிகுமதம்-அதிக்மதம்; விறல்-மிடுக்கு; களிறுஆண் யானை)

என்ற பாசுரத்தால் காட்டுவர். கன்னத்தினின்றும் மத்தகத்தினின்றும் பெருகியொழுகும் மத நீரால் வாய் கொப்பளிக்கின்றது யானை. அருவிபோல் கால் வரையி லும் பெருகி வழியும் மதநீரால் கழுவுகின்றது. இங்ஙனம்

17. மூன். திருவந்-70