பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I? வடநாட்டுத் திருப்பதிகள்

காட்டுவன். இங்குள்ள குரங்குகள் மூப்படைந்து கண் இடுகிப்போய் வழியறியாது வருந்தும் மாதவர்க்கு அவர்கள் செல்லவேண்டிய அருநெறிகளைக் காட்டு கின்றன. இது போன்ற பல காட்சிகளை அங்குக் காணலாம். பேயாழ்வாரும் ஒரு குரங்கின் செயலைக் காட்டி மகிழ்வர். தெளிவான கற்பாறையின்மீது உட் கார்ந்து கொண்டுள்ளது பெண் குரங்கொன்று. அது தனக்கு நட்பாகவுள்ள ஒர் ஆண் குரங்கை நோக்கி விண்ணில் வெண்ணிறமாகத் தோன்றும் தண்மதியைப் பிடித்துத்தருமாறு வேண்டுகின்றது.

தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி

அளிந்த கடுவனையே

நோக்கி-விளங்கிய

வெண்மதியம் தாவென்னும்

வேங்கடமே!’92

(சிலா தலம் - கற்பாறை மந்தி -பெண் குரங்கு:

கடுவன்-ஆண் குரங்கு மதியம்-திங்கள்)

என்பது பேயாழ்வாரின் சொல்லோவியம்.

திருவேங்கட மலையின் உயர்ச்சியைக் காட்டும் போக்கில் முங்கில்களின் வளர்ச்சியையும் காட்டுகின்றார் பேயாழ்வார். திருமலையின் மூங்கில் சந்திர மண்டலத் தனவும் உயர்ந்து வளர்ந்துள்ளது. அது மதியைப்பற்றிக் கொண்டிருக்கும் இரர்குவையும் தகர்த்துக் கிரகணத் தையே விடுவித்து விடுகின்றது. தீங்கழைபோய் வென்று விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே!” என்பது ஆழ்வாரின் திருவாக்கு. இத்தகைய பல காட்சிகளை திவ்வியகவி பிள்ளைப் பெரும்ாள் அய்யங்கார் அற்புத

21. அயோ. சித்திர-30. 28. .-72 22. மூன். திருவந்-58