உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொராக்கோ நீங்கள் மொராக்கோவுக்குப் போயிருக்கமாட் டீர்கள். ஆனால் மொராக்கோவைப் பார்த்திருப் பீர்கள். திரைப்படம் எடுப்பவர்களுக்கு விருப்பமான சில நாடுகளில் மொராக்கோ ஒன்று. வரலாற்றுக் கதைகளைப் படமாக எடுக்க மொராக்கோ ஏற்ற நாடு. ஐரோப்பாவிலுள்ள மலை ஒன்றைத் திரைப்படத்தில் காட்டவேண்டுமானால் அதைப்போன்ற மலை மொராக்கோவில் இருக்கிறது. மங்கோலியாவின் புல்வெளிகளைப் போன்ற காட்சிகளை வெள்ளித்திரையில் காட்டவும் அந்த நாட்டுக்கு 15,000 மைல் அப்பாலுள்ள மொராக்கோ நாட்டில் வாய்ப்பு உண்டு. நுண்ணிய கைவினைப் பொருள்களை மென்மை யான தோலில் செய்யும் கலை இந்நாட்டில் இணை யற்று விளங்குகிறது, பல தலைமுறைகளாக நெசவு செய்து பழக்கப்பட்டவர்கள் கம்பளங்களை உருவாக்கு கிறார்கள். செப்பு, உலோகம், இரும்பு ஆகியவற்றில் தங்கள் கலைத்திறத்தையும் கைவன்மையையும்காட்டக் கூடியவர்களும் உள்ளனர்,