உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அரண்மனைக்குப் போட்டியாக இங்கு ஒரு சுல்தான் ஓர் அரண்மனை அமைத்துள்ளார். இந்த நகரில் தேசிய அரும்பொருட் காட்சிக்கூடம் இருக்கிறது. பெரிய நூல் நிலையங்கள் உள்ளன. கலைச் சிறப்பு மருத்துவக் கலையில் பெரும்புகழ் பெற்றவர்கள் வாழ்ந்த வீடுகளை மொராக்கோவில் காணலாம். அராபியரின் தத்துவங்களைபற்றி ஆராய்ந்த ஸ்பெயின் நாட்டுப் பேரறிஞர் இல்லங்களும் இங்கே காட்சிப் பொருளாக உள்ளன. வண்ண ஓவியங்களால் வான்புகழ் பெற்றுள்ள ஓவியர்கள் பலர் இன்றும் வாழும் நாடு மொராக்கோ. மீனாட்சியம்மன் கோயிலில்போல, பழமைக் கலைச் சிறப்பின் சிகரமாக விளங்கிய கோபுரங்களைப் புதிய வண்ணம் தீட்டிக் கலையையும் பார்ப்பவர் கண்களையும் கெடுக்கும் திருப்பணிகளை மொராக்கோவில் ஒருவரும் செய்யவில்லை. அத்தகைய திருக்கூட்டத்தைத் திருப் பணியாளர் என்று போற்றும் அளவுக்கு அங்குக் கலையறிவும் பக்தியின் தன்மையும் குறைந்துவிட வில்லை. கோபுரக் கலசம்போல மசூதிகளின் அமைப்பில் பொன் நிறத்தில் உருண்டை வடிவங்கள் உள்ளன. அவையே மொராக்கோ நாடெங்கும் வெற்றிலை பாக்குக் கடைகளின் சின்னமாக உள்ளது. மூர், சோனகம் மொராக்கோ முஸ்லீம்களை 'மூர். என்று ஆங்கிலத் திலும் சோனகர் என்று தமிழிலும் குறிக்கலாம். இவர்கள் உலகெங்கும் வணிகத் தொடர்புடையவர்கள்.