உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பிட்டுச் இருக்கிறது. 17 சொல்வது உலகெங்கும் வழக்கமாக மொராக்கோவின் சில பகுதிகள் ஸ்பெயின், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளைப்போல இருக்கின்றன. இக்காரணங்களால் திரைப்படம் எடுப்பவர்கள் மொராக்கோ நாட்டை நன்கு பயன்படுத்திக் கொள் கின்றனர். இரவல் குரல் கொடுக்கும் பாடகிகள் இருப்பது போல இரவல் காட்சி தரும் நாடுகளும் உள்ளன. அவற்றுள் ஒன்று மொராக்கோ. அமைப்பு மொராக்கோ ஆப்பிரிக்காவின் வடமேற்கு மூலை யில் இருக்கிறது. மேற்கே அட்லாண்டிக் கடலும் வடக்கே மத்திய தரைக் கடலும் கிழக்கிலும் தெற்கிலும் அல்ஜீரியாவும் உள்ளன. இங்கு சூரிய வெப்பம் மிகுதி. கடற் காற்று வீசுவதால் குளிரும் பனியும்கூட மிகுதியாகத்தான் இருக்கின்றன. அட்லாஸ் என்ற மலைத் தொடர்கள் இங்குள்ளன. இவை உலகத்திலுள்ள ஏனைய மலைகளைப் போலல்லாது இரு பக்கங்களிலும் பாறைகளையுடைய மண்மலையுடையது. 13,000 அடி உயரமுள்ள மலைகளும் உள்ளன. இவற்றில் எரிமலைகளும் உண்டு. மக்கள் தொகை: இந்த நாட்டின் மக்கள் தொகை ஒரு கோடி முப்பது லட்சம். பரப்பு : 1,71,305 சதுரமைல். இது தமிழ்நாட்டைப் போல மூன்றேகால் பங்கு. நகரங்கள்: மிகப் பெரிய நகரம் காசாபிளான்கா. மக்கள் 11 லட்சம். ஏனைய நகரங்கள் மரக்கேஷ், மூன்று லட்சம். தலைநகரம் ரபாட், இரண்டரை லட்சம். பெஜ் வ. ஆ.2