உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம், எண்ணெய்யும் உடற்பழக்கம். தமிழ் நாட்டில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். மலையாளிகள் தலைக்குத் தேய்ப்பது முதல் சமையல் செய்வதுவரை எல்லாவற்றிற்கும் தேங்காய் எண்ணெய்யைப் பாவிக் கிறார்கள். வங்காளத்திலும் பஞ்சாப்பிலும் இவ்வாறு உதவுவது கடுகு எண்ணெய். மொராக்கோ நாட்டவ ரின் வாழ்க்கை ஆலிவ் எண்ணெய்யுடன் இரண்டறக் கலந்திருக்கிறது. அவர்கள் உடம்பில் ஆலிவ் எண் ணெய்யைத் தேய்த்துக் கொள்ளுகிறார்கள். ஆலிவ் எண்ணெய்யிலேயே சமையல் செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களுடைய உடல் கொழு கொழு என்று இருக்கிறது. ஒவ்வொருவரும் சித்தானைக் குட்டிபோல் இருக்கிறார்கள். உடற்கட்டில்லாத இந்தியர் யாரையாவது பார்த் தால், "பாவம்! ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்த இவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை” என்று சொல்லி இரக்கப்படுவார்கள். உடலில் எண்ணெய் தேய்த்துக்கொள்ளக்கூடா தென்ற தமிழ்வாணன்-ஈ. வே. TIT. இயக்கம் ஆப்பிரிக்காவுக்குப் பரவவில்லை. தொழில்கள் இந்நாட்டின் முக்கியமான தொழில்கள் திராட் சையிலிருந்து மது தயாரித்தல், பருத்தி ஆடைகளும் கம்பள ஆடைகளும் செய்தல் முதலியன. சிமிண்டு, உலோகப் பொருள்கள், தோல் பொருள்கள் ஆகியவை யும் செய்யப்படுகின்றன.