உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பல்சுவை இந்த நாட்டில் வேடிக்கையான பல பழக்கங்கள் நிலவுகின்றன. அடுப்பில் தீமூட்ட கழுதைவிட்டை யைப் பயன்படுத்துகிறார்கள். சைக்கிள் வாங்குவதுபோல மனைவியை விலைக்கு வாங்கலாம். திருமணத்தன்று மணமக்கள் இருவரும் மொட்டை அடித்துக் கொள்ளுகிறார்கள். மனைவி சிரித்தால் அவளுடைய நடத்தை தவறு என்று பொருள். சிரித்ததைக் காரணமாகக் காட்டி மனைவியை விலக்கி வைக்கலாம். மனைவியை விலக் காமலும் புதிய மனைவியை மணந்துகொள்ளலாம். பெண்களுக்கு எவ்வி த உரிமையும் இல்லை. தேர் தலில் வாக்களிக்கும் உரிமை 1967 -இல் தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. பல மனைவியரை மணந்துகொள்ள கணவனுக்கு உரிமை உண்டு. மனைவியரிடையே ஏற்படும் பூசல்கள் ஏராளம். ஒவ்வொருத்திக்கும் தனி வீடு கட்டிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே பணக்காரர் மட்டுமே பல மனைவியரை மணந்துகொள்கின்றனர். மனைவியர் பலர் இருந்தபோதிலும், கணவன்-மனைவி ஊடலுக்குக் குறைவில்லை. மியக் இந்த நாட்டின் மதம் இஸ்லாமிய மதம். இஸ்லா குடியரசாக இந்த நாடு நடைபெற்று வருகிறது. சில துறைகளில் பிரெஞ்சுச் சட்டம் அமலில் இருக்கிறது. அரசியல் சட்டம் இஸ்லாமிய சமயக் கொள்கைகளுக்கே ஏற்றம் தருகிறது. நடைமுறைப் பழக்கம் பிரெஞ்சுச் சட்டம் இரண் டையும் இணைத்து, நீதி மன்றங்கள் தீர்ப்புக் கூறு கின்றன. அரசியல் கட்சிகள் பொருளாதார அடிப்