உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1830 1912 1912-1956 1930 1942 1952 வரலாறு பிரெஞ்சு ஆட்சி இங்கு ஏற்பட்டது. பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு செல் வாக்கு இருந்தது. ஐரோப்பிய நாடுகள் வட ஆப்பிரிக் காவைத் தங்கள் பாட்டன் சொத்தாகக் கருதி தங்கள் விருப்பம் போல் பங்கு போட்டுக் கொண்டனர். அந்த ஏற் பாட்டின்படி எகிப்து, சூடான் பகுதி களில் பிரெஞ்சுக்காரர் தங்கள் உரிமை களைப் பிரிட்டனுக்கும். மொராக்கோவில் பிரிட்டிஷார் தங்கள் உரிமைகளைப் பிரெஞ்சுக்காரருக்கும் விட்டுக் கொடுத் தனர். 44 ஆண்டுகள் முறையான பிரெஞ்சு ஆட்சி நடைபெற்றது. போக்குவரத்து கல்வித் துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டது. பிளேக் நோய் ஒழிக்கப்பட்டது. தரிசு நிலங்களிலும் பயிர்த் தொழில் செய்யப் பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்ற கொள்கைகள் மொராக்கோவுக்கு மறுக்கப்பட்டன. தேசிய உணர்ச்சி தோன்றிற்று. விடுதலை இயக்கம் வேரூன்றிற்று. சுல்தான், பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.