32 வடஆப்பிரிக்காவிலுள்ள வேறு எந்த நாட்டையும் விட அல்ஜீரியா தான் மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கிய நாடு. அல்ஜீரியாவில் மூன்றில் இரண்டு பகுதி 3,000 அடி உயரமான மலைப்பகுதி. சஹாராப்பாலைவனத்துக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதியின் உயரம் 7,000 அடிக்கும் மேல் உள்ளது. இது நீலகிரி மலையின் உயரத்துக்குச் சமமாகும். கடலோரத்தில் சிறி தளவு மழைபெய்கிறது. பாலை வனத்தை நெருங்க நெருங்க மழையின் அளவு குறைகிறது. இந்த நாட்டில் குறிப்பிடத்தக்க ஆறு ஒன்றே ஒன்றுதான். இதன் பெயர் செலீப் என்பது, செலீப் காவிரி போன்று 435 மைல் நீளமுடையது. ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் காவிரி நீர் அனைத்தும் வேளாண்மைக்கு உதவுகிறது. உலகத்தில் வேறு எந்த ஆற்றுக்கும் காவிரிக்கு உரிய இந்தப் பெருமை கிடையாது. வட அல்ஜீரியா மூன்று ஆட்சிப் பகுதிகள் கொண் டது. இப்பகுதிகளின் பெயர் ஓரான், அல்ஜியர், ஓரான் மாநிலம் கான்ஸ்டன்டைன். ஸ்பானிஷ் ஆட்சியிலிருந்தது. சிலகாலம் தென் அல்ஜீரியாவின் ஆட்சிப் பகுதிகள் 1. ஐன் செப்புரா. 2. கார்டையா, 3. சஹாராப் பாலைவனம் என்பன. சஹாராப் பாலைவனத்தில் ஆட்சி செய்வதற்கு என்ன இருக்கிறது என்று வாசகர்கள் நினைக்கக்கூடும். இமயமலை ஓரத்திலும் சீன எல்லையிலும் மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் நமது அரசினர்
பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/33
Appearance