பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷露2 வடவேங்கடமும் திருவேங்கடமும் அடியார்களின் கூட்டம் பெருகியும் அவர்கள் செல் வாக்கு வளர்ந்தும் வருவதைக் கண்ட அமைச்சர்கள் பொறாமை கொண்டனர். அவர்கள் அந்தரங்கமான இடத்திலும் எக்காலத்திலும் சிறிதும் தடையின்றி நட மாடுவதையும் அரசனிடம் வரம்பு கடந்த சுதந்திரத்துடன் பழகுவதையும் அமைச்சர்கள் காணும்போது இப் பொறாமை மேலும் வளர்வதாயிற்று. அவர்கள் அடி யார்களிடம் அரசனுக்கு வெறுப்பை உண்டாக்கக் கருதி னர். ஒரு சமயம் அரண்மனையில் இராம நவமிப் பெரு விழா நடை பெற்றபோது, இராமமூர்த்திக்கும் அர்ச்சாவ தாரமுள்ள மற்ற எம்பெருமான்கட்கும் திருமஞ்சனம் செய்தற் பொருட்டுத் திவ்வியாபரணங்களையெல்லாம் களைந்து வைத்தனர். எல்லோரும் சுவாமி சேவையில் கருத்துன்றி நிற்கும்போது அமைச்சர்கள் திருவாபரணத் திரளிலிருந்து ஒரு நவரத்தினமாலையை எடுத்து ஒளித்து வைத்தனர். பின்பு அர்ச்சகர், பெருமாளுக்கு அலங்காரம் செய்யும் பொழுது அந்த முக்கிய அணிகலத்தைக் காணா மல் கவலைப்பட்டுச் செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் மனங்கலங்கி கள்வனைத் தேடிப் பிடிக்குமாறு அமைச்சர்கட்குக் கட்டளையிட்டனன். அமைச்சர்கள் பாகவதர்களே எங்கும் சுதந்திரமாகத் திரிவதால் அவர் கள்தாம் இதனைக் களவு செய்திருத்தல் வேண்டும் என்று அவர்கள்மீது அடாத பழி சுமத்தினர். அரசனால் அப்பழியைத் தாங்க முடியவில்லை. அடி யார்களின் நற்குண நற்செயல்களை நன்கு அறிந்த மன் னர்க்கு அவர்கள் மீது சங்கை கொள்வதற்கு மனம் ஒப்ப வில்லை. உடனே அவர் பழி சுமத்தின அமைச்சர்களைக் கடிந்து வைணவ சிகாமணிகள் இத்தகாத செயலை மனத்தினாலும் கருதார்: இது திண்ணம்: இதனை உறு திப்படுத்துவதற்கு யானே பிரமாணம் காட்டுவேன்' என்று கூறிக் கொடிய நாகம் ஒன்றினைக் கொண்ட குடம்