பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சங்கத் தமிழ்நூல்கள் என்ற சிறப்பினுக்கு உரிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என். தொகை வரிசையுல் நடுவண் வைத்து மதிக்கப்பெறுவது எட்டுத்தொகை; அது. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டு நூல்களைக் கொண்டது. அவற்றுள் நான்காவதாகிய பதிற்றுப்பத்து, சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ்நாடாண்ட மூவேந்தருள், முதற்கண் வைத்து மதிக்கத்தக்க சேரர்குலக் காவலர் பதின்மர் ஒவ்வொருவரையும், பத்துபத்துப் பாக்களால், தனித்தனியாகப் பத்து புலவர்கள் பாடிய நூறுபாக்களைக் கொண்ட பெருநூலாகும்; அவற்றுள் இரண்டாம் பத்தும், பத்தாம் பத்தும் காணுமற் போகக், கிடைத்திருப்பன எட்டுப் பத்துக்களே.

அவற்றுள் இரண்டாம்பத்தில், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக், குமட்டுர் கண்ணனரும், மூன்றாம் பத்தில்: பல்யானைச் செல்கெழு குட்டுவனைப், பாலைக் கெளதமஞரும், நான்காம் பத்தில், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலைக்காப்பியாற்றுக் காப்பியருைம், ஐந்தாம்பத்தில், செங், குட்டுவனைப் பரணரும், ஆரும்பத்தில், ஆடுகோட்பரட்டுச் சேரலாதனைக், காக்கைப் பாடினியார் நச்செள்ளையாரும், ஏழாம் பத்தில், செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலரும், எட்டாம்பத்தில், தகடூர்எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையை, அரிசில் கிழாரும், ஒன்பதாம் பத்தில், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப், பெருங்குன்றுார் கிழாரும் பாடியுள்ளனர். கிடைத்துள்ள எட்டுப்பத்துக்களையும், பத்துப்பாட்டு விளக்கம் என்ற வரிசையில், ஒவ்வொரு