பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 55 அந்தச் சமயமாகப் பார்த்து, கோகிலா, தலையில் சுற் றிக் கொள்வதற்கான ஒரு கம்பளித் துண்டினை சொர்ணத் தம்மாளிடம் கொடுத்துவிட்டு வந்தாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்தக் கம்பளித் துண்டு சொக்கலிங்கத்திடம் இருக்கக் கண்டாள்; புன்னகை கொண்டாள். அவர் எனக்குத்தான்! எனக்கேதான்! என்று அவளுடைய இதயம் பாடலாயிற்று. துப்பு ஓரளவு துலங்கத் தொடங்கிவிட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் கோகிலா மேலும் வேலை செய்தாள்; சொக்க லிங்கம் வண்டிக்காரன் மகன் என்பது அவளுக்குத் தெளி வாகிவிட்டது. தான் அறிந்த இந்த இரகசியத்தை உடனே உமாவிடம் கூறிவிட வேண்டும்; உமாவின் மனதிலிருந்து சொக்கலிங்கம் அடியோடு தூக்கி எறியப்பட்டுப் போய்விடுவான்; பிறகு அவன் முழுக்க முழுக்க தனக்கே உரியவனாகிவிடுவான் என்று தோன்றிற்று. களிப்புக் கடலில் மூழ்கினாள். மறுகணம் யோசித்தாள். அவர்,ஏதோ ஒரு மிக முக்கிய மான காரணம் இல்லாமல், இப்படித் தன்னை யார் என்று காட்டிக்கொள்ளாமல் இருக்கமாட்டார்.நாம் நமது சுயநலம் காரணமாக, அவசரப்பட்டு, இரகசியத்தை வெளியிட்டு, அவருடைய திட்டத்தைக் கெடுத்துவிடக் கூடாது என்ற எண் ணம் பிறந்தது. தாள். ஆகவே பொறுத்திருக்க வேண்டும் என்று தீர்மானித் காலையிலே சென்று பறித்தெடுக்க வேண்டிய கனியின் சுவையைப் பற்றி இரவெல்லாம் சிந்தித்து மகிழ்ச்சியுடன் இருந்திடும் நிலையிலே, கோகிலா நாட்களை ஓட்டிக் கொண் டிருந்தாள். எல்லோரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் காளிங்கராயர்கூட சொக்கலிங்கத்திடம் அன்புடன் பழக லானார்.