பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மகன் 49 "அதுவா! சரி, கோகிலா? சொல்ல எண்ணியதைச் சொல்லி விடுகிறேன். அவருடைய பிறப்பு வளர்ப்பு, குடும்ப நிலைபற்றி அவரிடம் கேட்க எனக்குக் கூச்சமாக இருக்கிறது. நீ அவரிடம் இதுபற்றித் தாராளமாகப் பேசலாமே. எப்படி யாவது அவரிடமிருந்து அந்த விவரத்தை மட்டும் கேட்டுத் தெரிந்து கொள்ளேன். நான் என் எதிர்காலத்தைத் தீர் மானித்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.' ‘ஆகட்டும்' என்று கோகிலா வாக்களித்தாள். சொக்கலிங்கத்தின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவளுக்கும் நிரம்ப அக்கரை இருக்கத்தானே செய்யும். அவளுடைய எதிர்காலமும் தானே இருக்கிறது. அதைப் பொருத்துத் 'முயற்சிக்கிறேன்'என்று கூறிவிட்டாள். ஆனால் எப்படி என்று எண்ணும்போதே அவள் தலை சுற்றிற்று. தனியாகச் சந்தித்து அவரிடம் பேச வேண்டும். தனியாகச் சந்திக்க முடியுமா? சந்தித்தால் அவரிடம் என்னென்ன பேசத் தோன்றிவிடுமே? என்ன நேமிட்டு விடுமோ என்பதை எண்ணிக் கொண்ட போது கோகிலா அச்சம் கொண்டாள். உமா, கணக்குப் பார்க்கிறாள். ஆகையால் பதறாமல் இருக்க முடிகிறது. ஆனால் என் நிலை! நான் முழுக்க முழுக்க என் உள் ளத்தை அவரிடமல்லவா பறிகொடுத்துவிட்டிருக்கிறேன். அவரை நான் தனியாகச் சந்தித்தால்.. என்பது பற்றி எண்ணிடும்போதே கோகிலாவின் உடலெல்லாம் பதறிற்று. ஆனால் இதழோரத்தில் ஒரு பொலிவு மலர்ந்தது. வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போன்ற நிகழ்ச்சி களும் நடந்து விடுகின்றன. யாரும் திட்டமிட்டுச் செய்வ தல்ல. ஆனால் ஆயிரம் தேள் கொட்டுகிறது, அந்த நிகழ்ச்சி களின்போது.