பக்கம்:வண்டிக்காரன் மகன், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்புரை



சமூகத்தின் மூலை முடுக்குகளில் ஒளிந்து கிடக்கும் உயிர்த் துடிப்புள்ள பிரச்னைகளில் ஏதாவது ஒன்றை எடுத்து, வெளிப்படுத்தி, அதற்குப் பரிகாரம் காண முயல்வது எதுவோ அதுவே சிறுகதை.

இதில் வெற்றி கண்டவர் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேதான் இன்றளவும் இருந்து வருகிறார்கள்.

ரசனைக்காக எழுதுவதை கவலையை மறப்பதற்காக கற்பனையில் சிறகடித்துப் பறப்பதையெல்லாம் சிறுகதையாக ஒருக்காலமும் அங்கீகரிக்க முடியாது.

படிப்பதற்காக மட்டுமல்ல. படிப்பினை பெறுவதற்காகவும் அந்தச் சிறுகதை இருக்க வேண்டும்.

துவண்டு போயிருக்கும் மனத்தைத் தூக்கி நிறுத்தும் வல்லமை கவிதைக்கு எந்த அளவுக்கு உண்டோ, அதே அளவுக்கு சிறுகதைக்கும் உண்டு.