பக்கம்:வரதன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மோசம் போளுன் உண்மையில் வரதன் மோசமே போனன். அந்த இளை ஞன் மிகவும் பொல்லாதவன். அவனிடம் நல்ல குணம் எள்ளளவும் கிடையாது. அவன் மோசம், கொலை, களவு முதலிய எல்லாவற்றிற்கும் துணிந்தவன். அவன் தந்தை, எவ்விதமோ சிறிது பணம் சேர்த்துப் பெரிய மனிதர்போல் வாழ்ந்து வந்தார். அவர் இறந்து ஐந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை. இதற்குள் அவன், அ வ ர் சேர் த் து ைவ த் த பொருள்களையெல்லாம் தொலைத்து விட்டான். அவன் பெயர் தாண்டவன் என் பது. அவனுக்கு மூத்த சகோதரர் மூவர் இருந்தனர்; அவர்கள் மூவரும் நல்ல காளே வயதிலேயே திடும். திடும் என இற்ந்துபோயினர். தாண்டவன் தந்தை அதி லிருந்து பிள்ளைகளையே வெறுக்க ஆரம்பித்தார். எனி னும் அவர் இந்த ஒருவன் மீது மட்டும் அளவு கடந்த அன்பினையே வைக்கலாயினர். இவன் ஒருவனவது உயிருடன் இருந்தால் போதும் என்றே அவர் எண்ணி னர். அதல்ை தாண்டவன் மனம்போனபடி ஆடலாயி ன்ை. மிகச் சிறுவனக இருக்கும்போதே தாண்டவன், தன் தந்தை அறியாதபடி வீட்டில் உள்ள பொருள்களைத் திருடிக்கொண்டு போய்விடுவான். அவன் சுற்றத் தாரும், நண்பருங்கூட அவனைச் சேர்ப்பதில்லை. அவன் திருட்டுத் தொழிலே அதற்குக் காரணம். அவன் ஒரு முறை சிறைச்சாலைக்குக் கூடப் போய் வந்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/32&oldid=891136" இலிருந்து மீள்விக்கப்பட்டது