பக்கம்:வரதன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வரதன் வழி நோக்கிச் சென்ருேம். அப்போது, மணி ஒன்றுக்கு மேல் இருக்கும். எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. வழியில் மக்கள் நடமாட்டம் சிறிதும் இல்லை. அப் போது, வண்டிகள் கூடச் செல்லவில்லை. அவ்வீதியின் இருபுறங்களிலும் வீடேனும் வாயிலேனும் காணப்பட வில்லை. எங்கும் மரங்களும் மைதானங்களுமே காணப் பட்டன. அப்போது, எனக்குச் சிறிது அச்சமாகவே யிருந்தது. எனக்குப் பேய் பிசாசுகளின் மீது நம்பிக்கை யில்லை யென்ருலும் தேள், பாம்பு, கண்டுத்தெறுக்கால் முதலியவைகளுக்காகப் பயப்படவேண்டுமே. நம் ஆசிரியரும் அப்போது, நாம் கையில் ஒரு விளக் கும் தடியும் எடுத்து வந்திருக்க வேண்டும் என்ருர். இவ்விதம் நாங்கள் நெடுந்துாரம் சென்ருேம். மணி சுமார் மூன்றிருக்கலாம். அப்போது, தயிர்ப் பானையைத் தலைமேல் வைத்துக்கொண்டு எங்களுக்கு எதிராகச் சிலர் வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் நாங்கள், 'ஐயா, புழல் மாதவரம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கின் றது ? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஐயா, மாதவரம் இன்னும் கொஞ்சம் தூரத்தில்தான் இருக் கிறது; அதற்கப்பால் போனல் புழல் கிராமம் என்ருர் கள். நம் ஆசிரியர் வரதனைக் குறித்து அவர்களைக் கேட்டார்; அவர்களுக்கு அவனைப்பற்றி யொன்றும் தெரியவில்லை. 'ஆதலால் நாங்கள் மேலும் சிறிது தூரம் சென்று மாதவரத்தை அடைந்தோம். மாதவரம் பெரிய கிராம மன்று அங்குப் பெரும்பாலும் குடிசைகளே காணப் பட்டன. ஆதலால், அங்குள்ளோர் அனைவரும் ஏழை களே. நாங்கள் அங்குச் சென்றபோது மணி நான்கடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/83&oldid=891240" இலிருந்து மீள்விக்கப்பட்டது