பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

வர்ணாஸ்ரமம்


தன் நெஞ்சைக் கேட்டார். மங்கை வந்ததும், "இதோ மல்லிகை, இது முல்லை, செண்பகக்கொத்து, ரோஜா, இதோ செந்தாமரையும் உண்டு காண்" என்று, மலர்க் குவியலைக் காட்டினார். "மகானே ! இந்த மங்கையின் பொருட்டு இவ்வளவு சிரமமா?" என்று கேட்டாள் மங்கை. அன்று அந்த மது உண்டதால் புதிய உற்சாகம்பெற்ற நீறுபூசி, நீற்றையும் நிகண்டையும், நித்ய பூஜையையும் நிஷ்டையையும் துறந்தார் ; மலர் பறித்திடவும் மாலை தொடுத்திடவும், மங்கையைக் கண்டிடவும் மலர் தந்திடவுமே அவருக்கு, நேரமும் நினைப்பும் இருந்தது. இந்த 'சக்தி' பூஜையின் பயனாக, அவர் சன்யாச ஆசிரமத்திலிருந்து கிரஹஸ்தாசிரமம் புகுந்து,மாயா உலக பந்தம் வேண்டேன் என்ற மனனத்தைத் துறந்து மனையறம் படித்து, அந்த ஊரிலேயே முதல்தரமான புஷ்பம் விற்பவரானார், என்றோர் கதை உண்டு. கலை இங்குள்ள நிலையிலே, அதிலே இலயிப்பவர் கதியும், மலையாண்டி மனையாண்டியானதுபோலத் தான் முடிகிறது, என்று நான் எண்ணுகிறேன். கலா ரசிகராகத் தொடங்கும் வாழ்க்கை கனபாடியின் தோழராக்கி, பக்தராக்கி, ஆரிய அடிமையாக்கி விடுகிறது. அந்த விதத்திலே கலை அமைந்திருக்கிறது. சங்க நூற்களிலேயுங்கூட சந்து கண்ட இடங்களிலே வந்து நுழைந்துகொண்டது ஆரியம். கடைச் சங்கத்திற்குப் பிறகோ எனில், ஆரியக் கருத்தே உட்பொருளாகவும், கலையே கவசமாகவும் அமைந்த நூற்கள் பெருகிவிட்டன. சங்க நூற்களிலே, யானை அலறக்கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமகனைக் காண்கிறோம்; பிறகோ, அண்-