பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

வர்ணாஸ்ரமம்


I

"பாகனே! தேரை விரைவாகச் செலுத்து.

"நற்றிறம் வாய்ந்த பாகனே! தேர் விரைந்துசெல்வதாக!

"விரைந்து செல்லவேண்டும். அங்குதான்! அறியாயோ நீ? கேள்!

"பைங்கிளியே! மழலை பல பேசவல்லாய் எனினும், நான் கேட்டுக் களித்திட ஒரே ஒரு சொல்கூறு; வேறு வேண்டிலேன். அவர் இன்று வருவார் என்றுரை. நம்மைப் பிரிந்து சென்றவர், இன்று வருவார் எனும் இன்சொல்லை, கிளியே, நீ கூறு' என்று, தன் முன்கையில் அமர்ந்துள்ள தத்தையினைக் கேட்கும், என் கிளிமொழியாளின் இல்லத்திற்குச் சென்றாக வேண்டும், விரைவாக! நொந்த மனத்துடன் வெண்மதிநுதல் சுருங்க, கிள்ளையுடன் பேசும் சொல்லினை வீட்டார்