பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அவள் தேகம் பதறியது. அச்சமயத்தில் அவள், உதறலெடுத்து ஒடுங்கி நிற்கும் முயல் குட்டி மாதிரியே காணப்படுவாள். தனது கணவனோடு ஒண்டி இருந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கும் என அவள் எண்ணியது உண்டு. ஆரம்பத்தில் அவள் அப்படிச் செய்தபோது, பயத்தினால் நடுங்கிக் கொண்டிருந்த அவன் சீறி விழுந்தான். தான் பயப்படாமல் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்குப் பாடுபட்டான் அவன்.

. "சீ என்ன இது சும்மா சும்மா இடிச்சுக்கிட்டு அப்புடி என்ன பயம் இப்ப? சுத்த வெருவுணி ஆக இருக்கியே, போயி அந்த மூலையிலே கிட என்று அவன் சிடுசிடுத்தான்.

அவனுக்கும் பயம்தான் என்பதை அவள் அறியாமல் இல்லை. அவனுடைய பார்வையே அதைக் காட்டிவிட்டதே அதனால்தான் அவன் அவள் பக்கம் பார்வை எறிவதற்குக் கூசினான். ஆயினும், அவளைப் பாராமல் இருக்கவும் இயலவில்லை. ஒரே அறையில் கிடந்து ஒரே விதமான உணர்வுகளை அனுபவிக்க நேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் ஏறெடுத்தும் பாராமல் இருந்து விடுவது என்பது எவ்வளவு நேரத்துக்கு சாத்தியமாகும்?

நேரம் பறக்கவுமில்லை, பாய்ந்து செல்லவுமில்லை - அவர்களைப் பொறுத்தவரை. ஆகவே, அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த வேதனைகளுக்கு ஒரு கால அளவு இல்லை என்றே தோன்றியது. அதனால் அவர்களுடைய தேகத்தின் நரம்புகள் எல்லாம் - அவற்றிலே விளையாடும் உணர்ச்சிகள் எல்லாம் - முறுக்கேற்றப்பட்டு. எந்தச் சமயத்திலும் சீர்கெட்டு நிலைகுலைந்து விடக் கூடிய தன்மையில் தான் இருந்தன. சிறு சலசலப்பு கூட, தெருவோரத்து நாயின் வெறும் குரைப்புகூட, எங்கோ யாரோ எவரையோ கூவி அழைக்கும் கூச்சல் கூட அவர்களுடைய உடல்களைக் குலுக்கி எடுத்தது. எதிர்பாராத வேளையிலே காற்று. குடிபோதையில் தள்ளாடுகிறவன்போல், ஆடி அசைந்து கதவின்மீது மோதுகிற போது-கதவு. லேசாகக் குலுங்கிக் சிற்றொலி. எழுப்புகிறபோது - அவள் பதறிப் போய் கதவைப் பார்ப்பாள். அப்புறம் அவனைப் பார்ப்பாள். அவளைப் பார்க்கும் அவனோ மண்ணையும் முகட்டை பார்க்க முயலுவான்.