பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50 ஓ ஒரு கண்ணில் படாத காதல்- j புகழ்ச்சி இன்பத் தேன்" ஆக வந்து பாய்ந்தது அவர் செவியில், அது ஆச்சர்யமில்லையே!

"உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் ரசிகர்கள் இருக்கலாம். இருந்தாலும் என்ன? உங்கள் பாட்டுத் திறத்தாலே நீங்கள் என் உள்ளத்தையும் கவர்ந்துவிட்டீர்கள். உங்கள் அழகு சூரிய ஒளி மாதிரி அதனால் நானும் சூரியகாந்திப் பூ மாதிரி ஆகிவிட்டேன்."

இப்படிப் பேசிய குரல் சினிமா பார்த்துப் பார்த்து "பித்தியிலும் ளபித்தி பெரும் பித்தியாகி விட்ட ஒரு யுவதியினுடையது தான் என்று தீர்மானித்தார் அவர். அவள் நல்ல ரசிகையாகத்தான் இருக்கவேண்டும்; இலக்கியம்-கலை முதலியவைகளில் பற்றுதல் கொண்டு பொழுதை இனிமையாகக் கழிப்பதில் ஈடுபட்டவளாக இருக்கலாம் என்று அவர் நினைத்தார்.

மறுநாள் அவள் அதே நேரத்துக்கு அவரை போனில் அழைத்துப் பேசினாள். உங்களுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதாக அறிகிறேன். உங்கள் மனைவி பாக்கியம் செய்தவளாகத்தான் இருக்கவேண்டும்.ஆமாம். நடிகர் ஸார். ரொம்ப காலமாக எனக்கு ஒரு சந்தேகம், நீங்கள் நடிக்கிற படங்களில் எல்லாம் காதல் காட்சிகள் மிகப் பிரமாதமாக இருக்கின்றன. ஒடுவதும் பிடிப்பதும், விலகிச் செல்வதும் தேடிக் காண்பதும், சிரிப்பும் விளையாட்டும்.ஆகா! எவ்ளவு இனிமை நிறைந்த விளையாட்டு உங்கள் காதல் மனைவியோடும் நீங்கள் இப்படி விளையாடி மகிழ்வது உண்டோ? என்று அவள் கேட்டாள். -

அவருக்குக் கோபம் வந்தது. "என்ன வேடிக்கையான பெண் இவள் என்ற எண்ணத்தினால் சிரிப்பும் எழுந்தது. "குறும்புத்தனமாகக் குறுக்கிட்டு வம்பளக்கும் நீ யார்?" என்று கேட்டார் அவர்,

"அருமையான சந்தர்ப்பம், அடாடா நழுவ விட்டுவிட்டீர்களே! நிலவு செயும் முகம் படைத்த நேரிழையே, நீ யாரோ என்று புதுநிலவு படத்தில் நீங்கள் அற்புதமாகப் பாடினிர்களே. அதையே இப்பொழுதும் பாடியிருக்கலாமே என்றாள் அவள்

"எனக்காக ஒரு பாட்டுப் பாடுங்களேன்" என்றும், "காதல் தீஞ்சுவை நிரம்பிய வசனங்கள் சிலவற்றைப் பேசி என்னை மகிழ்விக்கக்கூடாதா, அன்பரே" என்றும் அவள் வெவ்வேறு சமயங்களில் கெஞ்சினாள். -