பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிே வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் விளம்பரங்கள் சேகரித்து வெளியிட்டுப் பணம் வசூலிப்பதுதான் அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது. அதற்காகவே அவர் அவ்வப்போது விசேஷ மலர்கள் வெளியிட்டார். மலருக்கு விள்ம் பரங்கள் சேகரிப்பதற்கு என்று அவர் சேல்ம், சென்னை, திருச்சி எனப் போய் அங்கேயே மாதக் கணக்கில் தங்கி விடுவார். சினிமா உலகம் அதில் பணியாற்றிய எழுத்தாளர்களின் திறமை, உற்சாகம், எழுத்து இவற்றின் பயனாக தனித்தன்மை கொண்டு கவனிப்பு பெற்று வந்திருந்தது. அந்த ரீதியில் நானும் என்னால் ஆனதைச் செய்ய முடியுமே தவிர, நான் விரும்பியபடி இலக்கியப் பாதையில் வளர்ச்சி பெறு வதற்கு அந்தப் பத்திரிகை எனக்குத் துணைபுரிய இயலாது என்பதும் புரிந்தது. பத்திரிகைக்குப் பொருளாதார சிரமம் என்றும் இருந்தது. எனினும், மாதம் தோறும் இரண்டு முறை பத்திரிகை வெளி வருவது தேங்கியது இல்லை. அதற் காக நான் அதிகம் உழைக்க வேண்டியிருந்தது. சம்பளம் என்று மாதாமாதம் மொத்தமாக நான் பணம் வாங்கியதில்லை. ஆசிரியர் குடும்பம் வசித்த வீட்டின் ஒரு அறை தான் சினிமா உலகம் ஆபீஸ். குறுகிய அந்த இடத் தில் ஏகப்பட்ட சாமான்கள்-மேஜை, நாற்காலிகள், புத்தகங்களும் பைண்ட் வால்யூம்களும் அடுக்கப்பட் டிருந்த அலமாரிகள், டைப் மிஷின் முதலியன-நெருக் கடி விளைவித்தபடி காட்சி அளித்தன. அவற் றிடையே நானும் வாழ்ந்தேன். துணை ஆசிரியனாக, டைப்பிஸ்ட் ஆக, கணக்கு எழுதுகிறவனாக, தனிப் பட்ட முறையில் எழுத்தாளன் ஆகவும்.