பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வல்லிக்கண்னனின் போராட்டங்கள் சமூக நோக்கில் அவர் வாழ்க்கையில் வெற்றி கண்டவர். சர்க்கார் விவசாய இலாகா டிமான்ஸ்ட். ரேட்டர் ஆக உத்தியோகத்தில் சேர்ந்து, படிப்படி யாகப் பதவி உயர்வுகள் பெற்று, மேல் நிலை அடைந் தவர். அவர் எனது போக்கை வேறு எப்படி விமர்சிக்க முடியும்? அவரும் ராஜவல்லிபுரம்காரர் தான். ராஜவல்லிபுரம் திருநெல்வேலி நகரிலிருந்து கிழக்கே ஆறு மைல் துாரத்தில் உள்ள சிற்றுார். அழகான கிராமம், தாமிரவர்ணி ஆறு அதன் தென் திசையில் ஒரு மைல் தள்ளி ஓடுகிறது. ஆற்றின் கரையை ஒட்டி செப்பறை என்ற நடராஜர் திருத். தலம் இருக்கிறது. ராஜவல்லிபுரத்துக்கு செப்பறையை வைத்து ஒரு பெருமை. அதே போல, தமிழ் அறிஞர் ரா. பி. சேதுப் பிள்ளையும் அந்த ஊர்காரர் என்பதிலும் ஊர்வாசி களுக்கு ஒரு தனிப் பெருமை உண்டு. ஆனால் பிள்ளை அவர்களுக்கு ராஜவல்லிபுரத்தின் மீது அவ்வளவாகப் பற்றுதலோ பெருமையோ இருந்த தில்லை. அது வேறு விஷயம். ராஜவல்லிபுரம் வாசியான மற்றொரு பெரியவர் இலங்கை போய் வீரகேசரி’ பத்திரிகையில் வேலை பார்த்துப் பல வருடங்களைப் போக்கி விட்டு 1940 வாக்கில் சொந்த ஊர் வந்து சேர்ந்திருந்தார். உறவினரான அவருக்கும் எனக்கு உபதேசிக்கக் கூடிய உரிமை இருந்தது. உபதேசித்தார். என்ன, பார்த்த வேலையை விட்டு விட்டாயாமே? பத்திரிகைத் துறையிலே சேர்ந்து எழுத்தாளனாகப்