பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத விளையாட்டு * 甘76 என்ன இருந்தாலும் ஒருபூனையைக் கொல்லலாமா? பூனையைக் கொல்வது மகா பெரிய பாபம் என்று சொல்கிறார்களே மாமா? என்றான் சிவசைலம். அவரது உள் ளத்தில் வேதனை எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தான் அவன் பேசினான். பூனையைக் கொன்ற பாபம் தீரவேண்டுமானால், தங்கத்தினாலே ஒரு பூனை செய்து தானம் கொடுக்க வேண்டுமாமே? இந்தக் காலத்திலே தங்கத்துக்கு எங்கே போகிறது; தங்கத்தினால் பூனை செய்து தானம் கொடுக்க முடியாதவர்கள் வெல்லத்தினால் பூனை செய்து கொடுக்கலாம் என்று ஒருவர் சொன்னார், மாமா. பூனை உடம்பிலிருந்து ஒரு ரோமம் உதிரும்படி அடித்தாலே பெரிய பாபமாம். அப்படி இருக்கையிலே, பூனையே செத்துப் போகும்படி அடிப்பது என்றால், சேச்சே பயங்கரம் மகா பயங்கரம்! அவனுடைய பேச்சு அவருக்கு வேதனை அளித்தது. தனது தவறைச் சுட்டிக் காட்டியதனால் எழுந்த கோபமும், தான் செய்த வினைக்குப் பரிகாரம் இல்லை என்று உணர்ந்த உள்ளத்தின் குமைதல் தூண்டிய செயல் திறமற்ற ஆத்திரமும் அவருக்குக் கொதி நிலை உண்டாக்கின. சீ, போடா ! இங்கிருந்து போடாங்கிறேன்' என்று ஆங்காரத்தோடு கத்தினார் பிள்ளை, சாய்வு நாற்காலியில் துவண்டு விழுந்தார். அவர் உடலின் படபடப்பு திருவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. சிவசைலம் அவர் பக்கம் குறும்புத் தனமான பார்வையும் விஷமத்தனச் சிரிப்பும் எறிந்துவிட்டு, அவர் பார்வையிலிருந்து நகர்ந்து மறைந்தான். சிறிது சிறிதாக இருள் பரவி வந்தது. வேலைக்காரன் மாடசாமி வழக்கம் போல் அரிக்கன் லாந்தர் சிமினியை மிகச் சுத்தமாகத் துடைத்து, திரியைச் செப்பனிட்டு, சுடர் ஏற்றிக் கொண்டு வந்தான். திண்ணையில் அதற்கு உரிய இடத்தில் விளக்கைத் தொங்கவிட்டான். ... -