பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 & (வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் முன்னரே அறிமுகமான வத்ஸ் லாதான் என்பது விஸ்வநாதனுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது. அது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. வத்ஸலாவுக்கும் அப்படித் தான் இருந்தது என்பதை அவளுடைய முகத்திலிருந்து அவன் கண்டு கொண்டான். உள்ளே மறைந்த வத் ஸலா தன் தந்தையை அழைத்தாள். அவர் எழுந்து சென்றார். அவ்வேளையில் தன் மகனை நோக்கிய தந்தையிடம், அவன் சொன்னான்: “முதலில் நான் அவளிடம் தனியாகப் பேச வேண்டும். அப்புறம்தான் என் சம்மதத்தைத் தெரிவிக்க இயலும்" எனறு. வத்ஸ்லாவின் தந்தை சிவப்பிரகாசம் வழுக்கை மண்டையைத் தடவிக் கொண்டு முன் பக்கம் வந்தார். மோவாயைத் தடவியவாறு, மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த பரமானந்தம் மெதுவாக அறிவித்தார். - "பையன் வந்து பெண்ணைத் தனியாகக் கண்டு பேசனும் என்று.” . - * , . . இழுத்த பேச்சை அவர் முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே முகம் பூராவும் பிரகாசமடைய, சிவம் உற்சாகமாக, "வத்ஸலாவும் என்னிடம் இதே மாதிரிதான் சொன்னாள். நான் தனிமையில் அவரோட சில வார்த்தைகள் பேசணும். அதற்கு அப்புறம்தான் என் இஷ்டத்தைச் சொல்லமுடியும் என்றாள். இதை உங்களிடம் எப்படிச் சொல்வது பொண்ணு என்ன இப்படி இருக்குது என்று நீங்கள் நினைத்துவிடுவீர்களே என்று தயங்கினேன். இப்போ இரண்டு பேருக்கும் ஒத்த மனசு என்பதும் தெளிவாகிவிட்டது” என்றார். "நம்ம காலம் மாதிரியா இப்ப? எல்லாமே மாறிப் போச்சு. நம்ம குழந்தைகள் ரொம்ப முன்னேறிவிட்டார்கள்” என்று மகிழ்ந்து போனர் பரமானந்தம்,