பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை வாழ்வு * 76 பெற்று நின்றன. அவர் நீண்ட பெருமூச்செறிந்தார். ‘என்னய்யா, என்ன விசேஷம் ? என்று நண்பர் so ... . " - 岑、荔瑟.葱一系了T, 'அலமாரி பெட்டியையெல்லாம் சுத்தப்படுத்த ஆரம்பித்தேன். ஒரு பெட்டியில் புத்தகங்களுக்கிடையே ஒரு காகிதப் பொட்டலம் கிடந்தது. என்னடா என்று பார்த்தால் இந்தச் சங்கிலி. இது அங்கே இருக்கும் என்ற நினைப்பே எனக்கில்லை. திடீரென்று இதைப் பார்க்கவும், அடுக்கடுக்காய்ப் பழைய நினைவுகள் எழுந்து, உள்ளத்தில் கிளர்ச்சி உண்டாக்கிவிட்டன என்று கூறிய பிள்ளை மீண்டும் பெருமூச்சு விட்டார். கனவுக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வர முயல்கிறவர் போல் யோசனையில் ஆழ்ந்து விட்டார். பிள்ளையின் போக்கு நண்பருக்கு அதிசயமாகப் பட்டது. என்ன விஷயம் என அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இது யார் சங்கிலி? என்று கேட்டார். - - 'உம்மிடம் சொல்வதற்கென்ன? என்று முன்னுரை கூறினார் கி.பிள்ளை. நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. அந் நினைவுகளை நான் மறந்து விட ஆசைப்பட்டேன். என் மனக் குகை ஆழத்தில் அது புதையுண்டு விட்டதாகவே தோன்றியது. ஆனால் இந்தச் சங்கிலி அந் நினைவைப் படம் எடுத்து ஆட வைக்கும் மகுடியாகி விட்டதே!. மீண்டும் ஒரு பெருமூச்சு, நாராயணன் பார்வை அவரை அதிசயமாகவும், புதிதாக ஒருவரைப் பார்ப்பது போலவும் தொட்டது. அதைப் பொருட்படுத்தாமல் கிருஷ்ணபிள்ளை பேசினார். தமது நினைவுகளை உரக்கச் சிந்திப்பவர் போல், தமக்குத் தாமே பேசிக் கொள்ளும் தொனியில், அவர் சொல்லலானார்.