பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 令 を |ುಖ6366768Tಾಗಿತ; மணியான கதைகள் | ஆக்கித் தா என்று குழந்தை அழுது அடித்து முரண்டு பண்ணினால், அன்பு உள்ளம் பெற்ற தாய் தான் என்ன செய்ய முடியும் ? புத்திரபாக்கியத்தினால் பெருமை அடைந்துள்ள தந்தைதான் என்ன செய்ய இயலும் ? குழந்தையின் முதுகிலேசரியானபடி பூசைக்காப்பு கொடுத்து அதன் அழுகையை அதிகப்படுத்தலாம். அவ்வளவு தான்! பார்வதியின் மகன் மணியும் இத்தகைய அனுபவங்களின் நாயகனாக விளங்கியதில் ஆச்சர்யம் ஒன்று மில்லைதான். பார்வதி யும் அவள் கணவன் கைலாசமும் பையனைக் கொஞ்சினார்கள். பனமும் மனமும் துணை நின்றபோது அவன் கேட்டனவும் கேளாதனவும் அவனுக்குச் சித்திக்கும் படி அருள் புரிந்தார்கள். வாழ்க்கை வெயில் கொஞ்சம் அதிகமாகக் கருக்கி எடுக்க முனையும் வேளைகளில், குழந்தையின் செல்லமும் கொஞ்சுதல்களும் சேர்ந்தால், ஏச்சும் பேச்சும் அடியும் கொடுக்கலானார்கள். - அத்தகைய சந்தர்ப்பங்களில் தான் பார்வதிக்கு வேதனை துளும்பும். எண்ணங்கள் நெளிந்து கொடுக்கும். 'குழந்தை ஏன் இந்தப் பாடுபடுத்துகிறது? இது என்ன நினைத்து இப்படி எல்லாம் செய்கிறது? இதன் மனசிலே இருப்பதை நம்மாலே புரிந்து கொள்ள முடியலியே! என்ற ஏக்கம் பிறக்கும். அதற்காகக் குழந்தை படுத்துகிற போது அதை அடிக்காமல் இருக்க முடிகிறதா? ஆகாயத்தில் விமானம் பறந்து சென்றது. பாருடா கண்ணா! என்று அன்பாக அதைக் காட்டினாள் தாய். ஒருநாள், அது என்னது? என்று கேட்டான் மணி. அதிலே ஏறி உட்கார்ந்து கொண்டு பறந்து போகலாம் என்றாள் அவள். உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் அங்கேயிருந்து, அதோ மணிப்பையன் பாரு என்று பேசிக் கொள்வாங்க என்று பெருமையாக அறிவித்தாள். அவள் கண்டாளா அவளுடைய குழந்தையின் மனம் உடனே அங்கே பறந்தோடும் என்று?