பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் #39

ராஜவல்லிபுரம் 2ళ-3-శ్రీఠ

அன்புள்ள சண்முகவடிவு,

மார்ச் 24-ம் தேதி எனக்கு முக்கியமான ஒரு நாள். நான் ராஜவல்லிபுரம் வந்த ஐம்பதாவது நாள் அது. அதை விசேஷமாகக் தொண்டாட லாமே என்று நினைத்தேன். என்ன ஒட்டலில் ஒரு ஸ்பெஷல் ஸ்வீட், காரம், காப்பி சாப்பிடுவது என்று தீர்மானித்தேன்.

ஆனால் அந்த நாள் தன்னைத்தானே அதி விசேஷமானதாக ஆக்கிக் கொள்ளும்படி காலம் உதவியது.

இங்கு வந்து 50 நாட்களாகியும் உட்லண்ட்ஸ்' இராமகிருஷ்ணனை ஒரு தடவை கூடப் பார்க்கவில்லையே இன்று எப்படியும் பார்த்து விடவேண்டும் என்று நினைத்தேன்.

ஒயின்ஷாப்பில் பார்க்க முடிந்தது; 2-30 மணிக்கு அவர் பழைய சமாச்சாரங்களையே புத்தம் புதிய செய்திகள் மாதிரி என்னிடமே திரும்பவும் சொன்னார். நானும் ரசித்துக் கேட்டேன். கூல்ட்ரிங்க் (ரோஸ்மில்க்) வாங்கித் தந்தார். -

பிறகு ஒட்டலை கவனிக்கப் போனார். என்னையும் வரச் சொன்னார். பேசிக் கொண்டிருந்தோம். 4 மணிக்கு டிபன் உபசாரம் பண்ணினார். ஸ்வீட் (குளோப் ஜாமூன்), வடை, தோசை, வெங்காய பஜ்ஜி, காப்பி சப்ளை. நானாகக் கொண்டாடியிருந்தால் வெறும் ஸ்வீட், வடை, காபி தான் சாப்பிட்டிருப்பேன்.)

பிறகு பாளையங்கோட்டை போனேன். நடந்துதான். இலந்தைக் குளம் அருகே உள்ள ரோடில், வீட்டில், சிவசுவை பார்க்கலாமே என்று போனேன். எதிரே பாக்கியமுத்துவும் அவர் மனைவி சரோஜினியும் ஆட்டோவில் வந்தார்கள். அவர்கள் 'The Way of the Cross என்றொரு நாடகம் தயாரித்து, சேவியர்ஸ் காலேஜ் அரங்கில் அன்று இரவு நடிக்க ஏற்பாடாகியிருந்தது.

அது புதுமையான நாடகம், நான் கட்டாயம் வந்து பாt க்க வேண்டும்; தமிழ்நாட்டிலேயே இந்த டைப் நாடகம் நடந்ததில்லை என்று. பாக்கியமுத்து எழுதியிருந்தார். அதை பார்ப்பதற்காகத் தான் பாளையங்கோட்டை போனேன். 6 மணிக்கு காலேஜ் வாறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.

சிவசு வீட்டில் அவர் இல்லை. உடனே திரும்பி சில ரோடுகளில் நடந்தேன். 6 மணிக்கு அரங்கம் சேர்ந்தேன். பாக்கியமுத்துவும் மற்றும் 2 பேருமே இருந்தனர். 6-15க்கு மாடியைவிட்டுக் கீழே இறங்கி சும்மா நடந்தேன். கல்லூரி முன்னே சோலையாக