பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 2$

அதிகம். இனிப்பாக இருக்கும். கோடை காலத்தில் பெரும்பாலோரால் விரும்பி உண்ணப்படுகிறது.

கிருணிப்பழம்-அளவில் சிறியது. உருண்டை வடிவம் தான். அசட்டு மஞ்சள் நிறத் தோல். சிலவற்றில் வங்கு வத்தின மாதிரி வெண்மை படிந்திருக்கும். இது வெள்ளரிப் பழத்துக்குத் தம்பி-நிறம், குணம், ருசி, விதைகளின் அமைப்பு அனைத்திலும். இதை தனியாகத் தின்னும்போது சுவையாக இராது. சீனி கலந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். தோல் சீவிவிட்டு, துண்டுதுண்டாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தாராளமாக சீனி கலந்து, மூடி வைத்து, இரண்டு மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் சாறு நிறைய சேர்ந்திருக்கும். சாறுடன் சதையை சேர்த்துத் தின்ன ரொம்ப ஜோராக இருக்கும்.

கோடை காலத்தில் சென்னையில் மிக அதிகமாக தர்பூசணி, இளநி, ஐஸ்க்ரீம், கிருணிப்பழம் விற்பனையாகின்றன. லாயிட்ஸ் ரோடுப் பகுதியில் மட்டுமே மலைக்க-வியக்க வைக்கிற அளவுக்கு தர்பூசணி வந்து குவிந்து, விலைபோகிறது. மயிலாப்பூர், மாம்பலம் பகுதிகளிலும் நிறையக் காணப்படும். மொத்த சென்னை மாநகரத்திலும் எவ்வளவு வந்து குவிந்து விலைபோகும் ஒவ்வொரு வருடமும் என் மனசின் ஆச்சர்யம் இது. இவ்வளவும் எங்கே உற்பத்தியாகும் என்ற திகைப்பும் கூட

லாயிட்ஸ் ரோடு வட்டாரத்தில் கான்ட்ராக்ட் முறையில் வரவழைத்து, ரோடு ஒரங்களில் ஸ்டாக் செய்து, விற்பவர்கள் பலப்பலர் இருக்கிறார்கள். தர்பூசணியை அடுத்து கிருணிப்பழம் வரும். பிறகு மாம்பழங்கள் குவியல்குவியலாகக் காணப்படும். மூன்று மூன்றரை மாத காலம் லாயிட்ஸ் ரோடுப் பகுதி பழக்கடை அட்மாஸ்பியரோடு விளங்கும்.

அழுகிப் போகிறவை (தர்பூசணி, கிருணி, மாம்பழம்) அப்படி அப்படியே ரோடில் வீசி எறியப்பட்டிருக்கும். அவற்றை தின்ன தடிதடி மாடுகள் வரும். அவற்றை தடிகொண்டு விரட்டுவர் தடியர். மிரண்டு திரும்பும் மாடுகள் ரோடு வழி நடக்கும் அப்பாவி நடையர்களை மோத-முட்ட வருவது போல் ஒடும். ஆகவே, ரோடில் நடப்போருக்கு எந்த நேரம் என்ன விபத்து நேரும் என்று சொல்ல முடியாது.

அன்பு

ಏು!. ..