பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வல்லிக்கண்ணன்

சென்னை.

2?-??–88

அன்பு மிக்க நண்பர் அவர்களுக்கு, வணக்கம். நலம். நலம்தானே? ஒரு வேண்டுதல் விண்ணப்பமாக இக்கடிதம் எழுதுகிறேன்.

வேண்டுகோள். ரேடியோ நியூஸ் வேலைக்கு இனிமேல் என்னை கூப்பிட வேண்டாம். டிசம்பர் 1,2,3.16,17.18 தேதிகளில் வேலை செய்ய ஒப்புக்கொண்டு விட்டேன். ஜனவரியிலிருந்து எனக்கு விடுதலை அளிக்கும்படி வேண்டுகிறேன்.

இரண்டு மாதங்களாகவே உங்களிடம் இதை சொல்லிவிட வேண்டும் அல்லது கடிதம் எழுதவேண்டும் என்று எண்ணம். ஆனால், நான் என் எண்ணத்தை செயல்படுத்துவதற்கு முந்தியே, அடுத்த மாதம் வேலை செய்ய வேண்டிய தேதிகள் பற்றிய அறிவிப்பு தரப்பட்டுவிடும். திட்டமிட்டு, தேதிகள் ஒதுக்கிவிட்ட பிறகு, நான் மறுப்பது வீண் சிரமங்களுக்கு இடம் தருமே என்று மவுனமாக ஏற்றுக்கொண்டேன். இம்மாதம் 12-ம் தேதி முதல் எனது 69-வது வயது ஆரம்பமாகிறது. அது முதல் என் இஷ்டம் போல் சுதந்திரமாக இயங்குவதற்கு வசதியாக, நியூஸ் வேலையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினேன். முடியாமல் போச்சு 15-ம் தேதி, எனக்கு டிசம்பர் மாத வேலை நாட்கள் குறித்துக் கொடுக்கும்படி நீங்கள் அன்புடன் தெரிவித்து விட்டீர்கள். உடனடியாகவே திரு. ஜெயராமன் திட்டமிட்டு தேதிகளை என்னிடம் கூறிவிட்டார். ஆகவே, டிசம்பரிலும் வேலை செய்ய வேண்டியதாகி விட்டது.

உங்கள் அன்பும் நட்பும், உதவும் பண்பும் என் உள்ளத்தில் நெகிழ்வு ஏற்படுத்தி என்னை கட்டுப்படுத்துகின்றன. மே மாத இறுதியில், நான் உங்கள் விருப்பத்தைப் புறக்கணித்தேன். என் இஷ்டம் போல் ஊருக்குப் போனேன். நீங்கள் அன்புடன் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை. இன்னொருவராக இருந்தால், அதை எல்லாம் நினைவில் கொண்டு, மீண்டும் என்னைக் கூப்பிட்டு உதவி இருக்கமாட்டார். ஜூலையில் நான் வந்து உங்களைப் பாராமல் இருந்தபோது, நீங்கள் அன்புடன் உதவ முன்வந்தது உங்களது பெரிய மனதை, உயர்ந்த உளப் பண்பை காட்டுகிறது. அதனாலேயே நான் தொடர்ந்து நியூஸ் வேலையை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. .

எனக்கு 68 வயது முடிந்துவிட்டது. (காதுகளும் கண்களும் செயல்திறம் குறைந்து வருகின்றன). போங்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுக்கு முன் பல பணிகளை நான் முடித்தாக