பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

213 வல்லிக்கண்ணன் கதைகள்

பசுவை பத்திக்கிட்டு வா. கடைச் சங்கரனையும் வரச் சொல்லுதேன்' என்று திடமாக அறிவித்தார் அண்ணாச்சி.

மேற்கொண்டு அவன் எதுவும் மறுப்பு பேசமுடியாது. வாய் திறந்தால் போதும். 'நீ படிச்சுக் கிழிச்சது போதும்லே. மாட்டை, பார்த்துக்கிட்டு வந்து கூடமாட வேலை பழகு!’ என்று பெரியவர் கண்டிப்பாகச் சொல்லிவிடுவார்.

முருகனுக்கு அழுகை வந்தது. தயங்கி நின்றான்.

‘போலே சீக்கிரம். பசு குளத்துக்குப் போறதுக்க முன்னாலே மறிச்சிரலாம்... இல்லேன்னா அது கல்வெட்டாங் குழியைப் பார்த்து ஒடத் தொடங்கிரும்' என்று அண்ணாச்சி அவசரப்படுத்தினார்.

வேறு வழியின்றி, முருகன் புத்தகப் பையை பட்டாசாலைச் சுவர் மூலையில் வைத்து விட்டுக் கிளம்பினான்.

'மாடு தும்போடு தான் போகுது. சங்கரனும் நீயும் அதை மடக்கி, தும்பைப் புடிச்சி இட்டாந்தரலாம்' என்று யோசனை கூறினார் அண்ணாச்சி.

முருகன் வடக்குத் திசையில் ஒடலானான். பின்னாலேயே சங்கரனும் வந்து விட்டான். இரண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். இவன் ஆறாம் வகுப்பு படிக்கிறான். படிக்க வாய்ப்பும் வசதியும் இல்லாததால் அவன் மளிகைக் கடையில் 'எடுபிடி ஆள் ஆக வேலை பார்க்கிறான்.

சங்கரன் வேகமாக ஓடிவந்து முருகனுடன் சேர்ந்து கொண்டான். 'இந்த மாட்டோட இது பெரிய தொல்லையாப் போச்சு. அடிக்கடி தும்பை அத்துக்கிட்டு ஒடிஓடிப் போயிருது. நம்ம பாடுதான் திண்டாட்டமா இருக்கு லொங்கு லொங்குன்னு ஒடி, அங்கயும் இங்கயும் அலைஞ்சு, அதை கண்டுபிடிச்ச வீட்டுக்கு இட்டார வேண்டியிருக்கு' என்று அவன் சொன்னான்.

இரண்டு பேரும் ஒட்டத்தைக் குறைந்து 'பரும்நடையாக' நடந்து கொண்டிருந்தார்கள்.

'அண்ணாச்சிக்கு வேண்டாத வேலை. வீட்டிலே மாடுகட்டிப் பால் கறக்கணுமின்னு. மத்தவங்களுக்கு அதனாலே வெட்டி வேலையும் அதிக உழைப்பும் தான். அம்மா தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டியிருக்கு. தண்ணி காட்டுறது, தீனிவைக்கிறது, சாணி அள்ளிப்போடுறது, காலையிலும் சாயங்காலமும் பால் கறக்கிறதுன்னு எத்தனையோ அலுவல்கள். அப்படியும் இது நிறையப் பாலா தருது? வேளைக்கு, அரைப்படி பால் கறந்தால் அதிர்ஷ்டம்னுதான்