பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 வல்லிக்கண்ணன் கதைகள் லிங்கம் அவர்களை நெருங்கி நோக்கியதும் திடுக்கிட நேர்ந் தது. அவன் எதிர்பார்க்கவேயில்லை இப்படியும் நிகழும் என்று அவன் எண்ணவும் முடியாதே! மீனாட்சி தனது காவலை அலட்சியமாக மதித்துத் திருடவும் துணிவாள் என்று அவன் ஏன் நினைக்கப் போகிறான்? ஆனால் அவள்தான் நின்றாள். இரண்டு பேரில் ஒருத்தி மீனாட்சி. - அவள் தலை மண்ணை நோக்கித் தாழ்ந்தது. காத்தலிங்கத்தின் நெஞ்சு விம்மி, நெடிய மூச்சு ஒன்றை வெளியே தள்ளிவிட்டுத் தணிந்தது. வேதனைக் குளவி அவன் உள்ளத்தைக் குடையலாயிற்று. அவன் பேசுவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. பெண்கள் இருவரும் சிலைகளாக நின்றார்கள். 'மீனாட்சி, நீ கூடவா இப்படி?’ என்றான் அவன். மீனாட்சி குத்துக் கல்லாக நின்றான். மற்றவள் ரோஷம் கொண்டவள் போல் பேசத் தொடங்கினாள் : "அவ மட்டும் என்ன உசத்தி? அவளும் எங்களை போல் தானே? அவளுக்கும் தாராளச் செலவுக்கு நிறையப் பணம் வேண்டித்தானே இருக்கு? . "சீ கழுதை, வாயை மூடு என அதட்டி ஒரு முறைப்பு முறைத்தான் காத்து. உருட்டி விழிக்கும் கண்களையும் துடிக்கும் மீசையையும் பார்த்து அவள் பயந்து விட்டாள். அவன் அடித்து விடு வானோ என்று நடுங்கினாள். - . . . "வேறே யாராகவாவது இருந்தால் இதுக்குள்ளே ஓங்கி அறைஞ்சிருப்பேன். பொட்டைச்சிகளை அடிப்பது காத்தலிங்