பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் கதைகள் 19 'உம் ... வெளியே போங்க. வீட்டுக்குள்ளே வந்தா விளையாடுவது?’ என்று அவர் அதட்டினார். வெளியேபோக அடி எடுத்தவைத்த சிறுமியர், ஐயோ, வேங்கைப் புலி?’ என்று கத்திக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி நின்றுவிட்டனர். 'ஒகோய், அம்புட்டேளா? வசமா மாட்டிக்கிட்டேளா?” என்று உற்சாகமாகக் கூவிக் கொண்டு உள்ளே பாய்ந்தாள் இன்னொருத்தி. அவள்தான் ஆட்டுக் குட்டி களைத் தேடி அலைந்த வேங்கைப் புலி’ என்பது அறிமுகப்படுத்தப் படாமலே அம்பலமாயிற்று. சொக்கலிங்கம் உறுமினார்; என்ன கலாட்டா இது? வீட்டுக்குள்ளேயா விளையாட்டு? இரண்டு சிறுபிள்ளைகளையும் இரண்டு கைகளில் பிடித்துக்கொண்டு, வெற்றி மிடுக்கும் சிரித்த முகமுமாய் நின்றவள், அச்சமோ கூச்சமோ இல்லாமல், அவரை நோக்கினாள். சரிதாம் மாமா. இப்போ என்ன தேஞ்சு போச்சு இங்கே?' என்றாள். போக்கிரிக் கழுதை, போ வெளியே! கோபம் அவர் குரலில் பொறி தெறித்தது. அவள் சிரித்த முகத்தோடு அங்குமிங்கும் பார்த்தாள். சுவர்களில் அழகுசெய்த வண்ணப்படங்கள் அவளைக் கவர்ச்சித்தன. வியப்போடும் ரசனையோடும் அவற்றை ஆராய்ந்தாள் அவள். இந்தா வாறேன். போகாமல் இங்கேயே நின்னுக் கிட்டு, இது என்ன சண்டித்தனம்? சொக்கலிங்கம் சீ றி க் கொண்டு, நாற்காலியைப் பேரோசையோடு விலக்கிவிட்டு, முன்னேற முனைந்தார். r