பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 வல்லிக்கண்ணன் கதைகள் இன்று; இன்றுபோல் நாளை என்று வறண்ட பாதையில் நீண்ட பயணம் போவது வீண் வேலை என்று பட்டத. னால் அவனாகவே அதற்கு ஒரு முடிவு கட்டிக்கொள்ள முன் வந்தான். அம்முடிவுக்கு வந்ததில் அவனுக்கு வருத்தம் எதுவும் கிடையாது. ஆகையினால், விநாயகமூர்த்தி கயிற்றில் தொங்க βι Γέστη-55r. வாழ்க்கையைக் கண்டு நகையாடும் மனிதனைப் பார்த்து வாழ்க்கை சிரிப்பதும் உண்டு. காலத்தை வெல்ல முயலும் மனிதனுக்குத் தோல்வி தருவதில் காலம் வெற்றி பெறுவதும் உண்டு. தனக்குச் சரியெனத் தோன்றும் விளை வைப் பெறத் திட்டமிடும் மனிதனின் எண்ணத்தையும் செயலையும் தகர்த்து விட்டு. எதேச்சையாய் முடிவு' கெக்கலிப்பதும் உண்டு. விநாயகமூர்த்தி திட்டமிட்டுச் செயல் புரிந்த போதிலும், அவன் எதிர்பாராத விளைவு நிகழ்ந்தது, அவன் கனத்தைத் தாங்கும் சக்தி பெற்றிராததனாலோ, உள்ளுற இற்றுப் போயிருந்ததாலோ- காரணம் எதுவாக இருந்தால் என்ன? கயிறு புரி தளர்ந்து, அறுந்தது. அவன் தொபுக்கடிரென்று தரையில் விழுந்தான். அப் படியே கிடந்தான் ஒரு கணம். உடலில் அடிபட்ட இடம் வலித்தது. கழுத்தில் முடிச்சு அழுத்தியதால் வலி கண்டது. உணர்ச்சி வேலை செய்தது. அவன் கைகள் முடிச்சைத் தளர்த்தின. உடலின் பாகத்தை வருடிக் கொடுத்தன.