பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ த வி வன் ஒரு கைதி. அவன் பெயரைப் பற்றி மற்ற வர்களுக்குக் கவலை கிடையாது. அவனுக்கே அவன் பெயர் மறந்து போனுலும் போயிருக்கும். அவன் மீது எத்தனையோ குற்றச் சாட்டுகள். அவ இறுக்குக் கடுங்காவல் தண்டனை விதித்தது சட்டம். கம்பி களின் பின்னே, இருட்டறையினுள் தள்ளப்பட்ட அவன் இன்னும் பல கைதிகளைப் போலவே சுரங்க வேலை செய்ய நியமிக்கப் பெற்ருன். தங்கம் விளையும் பிரதேசத்தில், தங்கச் சுரங்கத்தை அடுத்திருந்தது அந்தச் சிறை. பூமியின் இருண்ட குடலி னுள் புகுந்து, தங்கக் கனிகளைப் பெயர்த்துப் பொன் திரட்டும் பணிக்குப் பல கைதிகளைத் தகுந்த கண்காணிப் புடன் நியமித்திருந்தார்கள். பூமியின் இருண்ட வயிறு போன்ற சுரங்கத்தினுள் அவனும் போனன். அவன் ஒரு கைதி. அவனுக்கு பெயருக்குப் பதில் ஒரு எண் இருந்தது. அறுபத் தஞ்சு- அந்தச் சூழ்கிலேயில் அதுதான் அவன் பெயர். எங்கோ கொண்டு வத்து நிறுத்தப்பட்ட குழந்தை யைப் போல் விமித்தான் அவன். வெளியுலக வெளிச்