10 உத்தமர் காந்தியின் எண்ணம் வெற்றி பெற்ற அதே வேளையில் வீரர் ஜின்னாவின் 'கனவும்' நினைவாயிற்று. 'பாரத்' பிறந்தது, பாகிஸ்தான் முளைத்தது. உரிமை உணர்வு பிறப்பித்த விடுதலைக் கிளர்ச்சி, இடத்தின் (இந்தியா) விடு தலையாக மட்டுமன்றி இனத்தின் (பாகிஸ் தான்) விடுதலையாகவும் பூத்தது, வாழ்கிறது. வரலாற்று இத்துணைக்கண்ட மக்கள் இதுகாறும் படித்து வந்த ஏடுகளின் இறுதிப்பக்கத்தில் இடம்பெற் றிருந்த அடிமைத்தனம், அரசியல் தளை அகன்றது. ஆளும் குழுவும் மாற்றமடைந்தது. ஆனால் அத்துடன் அடிமைத்தனம் முற்றும் நீங்கிவிட்டதாகவோ, முழு விடு தலை கிடைத்துவிட்டதாகவோ எவரும் கூற முடியாது. மக்கள் நிலையில் ஏற்றம் விளையா ததையும், மாறாகத் துன்ப மும் துயரமும் இன்று வரை நீங்கா ததோடு நாளும் வளர் வதையும், காணும் எவர்தான், 'விடுதலை கீதம்' பாடி ஆறுதல் கொள்ள முடியும். "சு தந்திர நாள்" கொண்டாட் டத்திற்கென எரிக்கப்படும் விளக்கொளி எவ்வளவு காலந் தான் மக்கள் கண்ணொளியை மங்கச் செய்து உண்மையை மறைக்க முடியும் ? எனவேதான் கருத்துள்ளோரும் கவலையுடையோரும், மேலும் மேலும் வரலாற்று ஏட்டைப் புரட்டுபவராகின் றனர். ஏடு, இறுதிப்பக்கத்தினின்றும் புரட்டப்படுகின் றது. வரலாறு, முன்னாள் ஏற்பட்ட அடிமைத்தனம், இன ஆதிக்கம், மத முடக்குவாதம், முதலிய அனைத்தை யும் அறிவுடையார்க்குப் புலப்படுத்துகின்றது. இந்த உண்மைகளை, நமது இழிவுக்கும் தாழ்வுக்கும் காரணமாக உள்ள நிலைமைகளைத் தென்னாட்டுத் தலைவர்கள், பற்பல வாண்டுகட்கு முன்பே கண்டுணரலாயினர். தென்னாட்டவர், தட்சிண பீடபூமி, பஞ்ச திராவிடம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பகுதியில் வாழ்ந்துவரும் மக்கள், பல நூற்றாண்டுகளாகவே வேற்றினத்தவரான வடவர் ஆதிக்கத்தில் சிக்கிச் சிதைந்து நிலைகுலைந்து எனற வரலாற்று தாழ்ந்து வந்துள்ளனர் சிறிது சிறிதாகத் தெளிவாகத் தொடங்கியது. உண்மை
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/11
Appearance