12 நாட்டினரின் மொழியை ஓரளவேனும் அறிந்திருப்பது அவசியமன்றோ ? அதுபோன்றே, அகத்தியரும் தமது கலை நாகரிக வாணிபத்துக்குத் தமிழறிவும் பெற்றுப் புறப்பட்டார். தக்க படைக்கருவியோடு வந்த அம்முனி தெற்கை நாளடைவில் தாழச்செய்ததும் வியப்பாமோ ? தேவர்க்குச் சார்பாகப் பூலோகத்திற்கு வந்து தமது கருத்தை எப்படியோ முடித்துக்கொள்ளும் புராண நாரதரைப் போன்றே, தெற்கே வந்த அகத்தியரும் வெற்றி பெற்றிருக்கக் கூடும். தெற்கைத் தமது வீரத்தால், படைபலத்தால், போரால் வெல்லமுடியா து; அவ்வகையால் தெற்கே வெல்லும்,உயரும் என்பதைக் கண்ட வடவர், தம் மொழி கலை மதக் கொள்கைகளால், வேதாகம சாஸ்திர புராண மகிமையால், சாதி ஆச்சார புரோகித தர்மத்தால் - அவைகளைப் புகுத்துவது மூலம் வெற்றிபெறக் கருதினர் போலும். உண்மைச் சிறப்பால் வெற்றி பெறாவிடினும், வஞ்சகமாகவாவது வீழ்த்தத் தீர்மானித்தனர். அதன் விளைவே - அகத்தியர் புறப்பாடு. . கைலையினின்றும் புறப்பட்ட அகத்தியர் கலை கொண்டு வந்தார். பொதிகையில் தங்கினார். சிறிது சிறிதாகச் செல்வாக்குப் பெற்றார். அகத்தியர் பலராயினர். தமிழர் கள தாமாகவே தாழ்வினை மேற்கொள்ளும் சூழ்நிலை பிறந்தது. அகத்தியருக்குப் பின், அயோத்தி இராமன் வந்தான். காட்டிலே தாடகையைப் படுகொலைசெய்தான், சூர்ப்ப நகையை மானக்குறைவு செய்தான், வாலியை வஞ்சகத் தால் மாய்த்தான் தென் இலங்கைக்கு எரி மூட்டினான், அரக்கர் குலத்தை இரக்கமின்றி அழித்தான், வீபீஷணர் களையும் அனுமார்களையும் (சுக்கிரீவர்களையும்) தோற்று வித்து, தெற்கையே வடக்கிற்கு வணங்கச் செய்தான். இதிகாசத்தின் குறிப்பின்படி, இராமன் வந்தான். புராணக்கதைகளினாலும், கற்பனைகளினாலுமோ, இராம னொடு கிருஷ்ண கிருஷ்ணன் வந்தான், வந்தான், அவதாரங்கள் வந்தன,
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/13
Appearance