28 யால், 1921-ல் சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதன்படி, அரசாங்கத் துறைகள் அனைத்திலும், எல்லாத்தரப் பதவிகட்கும், பல வகுப் பினரும் இடம் பெறும்படிக் கவனித்தே உத்தியோகங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது அரசாங்க ஆணையாகப் பிறந்தது. மேலும், இதன் நோக்கத்தையும் அரசாங்கம் தெளிவுப்படுத்தி யிருந்தது. எனினும், ஆதிக்கபுரியின ரின் தந்திரங்களால், இதனாலும் நியாயம் பிறக்கவில்லை. பழைய நிலைமையில் மாற்றம் இல்லை. பார்ப்பனர்களின் செல்வாக்கு மிகுந்த தேசீயக் காங் கிரஸ் வகுப்புரிமையை இயன்ற மட்டும் எதிர்க்கலாயிற்று. மேலும் நீதிக்கட்சியையே ஒழிப்பதற்காகப் பார்ப்பனரல் லாதார் பலரும் தேசீயக் காங்கிரசையே ஆதரிக்கின்றனர் என்று காட்டிக் கொள்வதற்காக "சென்னை மாகாணச் சங்கம்" என்னும் ஓரமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. அதில் பங்குகொண்டு உழைத்தவர்களில், திரு. வி. க., ஈ.வே. ரா. டாக்டர் வரதராசலு முதலியோர் குறிப்பிடத்தக் கவராவர். எனினும், 'வகுப்புரிமை' என்னும் நீதி தேசீயக் காங்கிரசிலேயே வேர்விடத் தொடங்கிற்று. மற்றும், காங்கிரஸ் நிர்மாணத்திட்டத்தை நிறை வேற்றும்படி பெருநிதி திரட்டிச் சேர்மாதேவியில் அமைக் கப்பட்ட குருகுலம், வ. வே. சு. ஐயரின் மேற்பார்வையில் நடந்தபோது, அங்கு ஒரு பெரும் அநீதி இழைக்கப் பட்டது. குருகுலத்தில் சாதி வேற்றுமை புகுத்தப் பட்டது. இலவசமாகப் பயிலும் மாணவர்களுள், பார்ப்பன மாணவர்களுக்குத் தனிப்பந்தி, நெய், நல்லமோர் இவை களுடன் சிறப்புணவும், பார்ப்பனரல்லாதார் மாணவர்க்கு தனிப்பந்தியும் வெற்றுணவும் அளிக்கப்பட்டன. இதைக் கேள்விப்பட்ட பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலைவர்களில் திரு. ஈ. வே. ரா. முதலானவர்கள் மனங் கொதித்து, இந்தச் சாதி வெறியை எதிர்த்துப் போரிட லாயினர். தேசீயக் காங்கிரசில், சமபந்தி உணவுக்குக் கூடப் போராட்டம் தேவைப்பட்டது அக்காலத்தில். அதுவே சுயமரியாதை இயக்கத்தின் வித்தாயிற்று எனில் தவறாகாது. போதே.
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/29
Appearance