உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அமைச்சர் குழுவைக் கலைத்து, நீதிக் கட்சித் தலைவர் பானகலின் ஆதரவில், புதிய குழுவை அமைத்த போது அதன் இரண்டாவது அமைச்சராக இடம்பெற்றார். காங்கிரஸ் சூழ்ச்சியில் விளைந்த செல்வாக்கு கவிழ்ந்தது, நீதிக்கு வலிவு ஏற்பட்டது. அப்பொழுது தான், பானகல் அவர்கள் பலவாண்டு களாகச் செய்து வந்த முயற்சி, திரு. முத்தையா அவர் களின் உறுதியால் நிறைவேறிற்று. கவர்னரின் ஆட்சிக் குழு உறுப்பினர்களில் (Executive Council members) சிலரே எதிர்த்த போதிலும், தமது கூர்த்த அறிவாலும், ஊக்கத்தாலும், உயர் நோக்கத்தாலும் நோக்கத்தாலும் உழைப்பாலும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது, 'கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமை நீதியை, 1928-ஆம் ஆண்டில் அர சாங்கத்தின் ஆணையாகப் பிறப்பித்தார் திரு. முத்தையா. முதலில் தமது நிர்வாகத்தில் இருந்த துறைகளில் அதைச் சரிவர நடத்திக் காட்டியே பின்னர், சட்டமாக நிறை வேற்ற நேரிட்டது. இடையில் பலவித எதிர்ப்புக்கள். என்றாலும் வெற்றி பெற்றார். அது காரணமாகவே சட்ட சபையில் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டுவரப் பட்டது. விவாதிக்கப்பட்ட பின்னர், முடிவில் அதுவும் ஆதரவாகவே அமைந்தது. து பார்ப்பனரல்லாதாரும், மற்றத் தாழ்நிலையினரும் வாழ்வு பெறும்படியான அச்சட்டம் பிறந்த உடனேயே, அச்சமூக நீதியைச் சாய்த்திட, மடிசஞ்சி மரபினர் வரிந்து கட்டி வசை தொடுக்கத் தவறவில்லை. பிறர் வாழப் பொறுக்கவில்லை பிரமன் முகத்துதித்தோரது உள்ளம். அவர்தம் உளுத்த உள்ளம் கக்கியது கடுவிஷம் ! அதைத் தாங்கி நின்று, நீதியைக் காக்கும் பணி புரிந்தனர் வீர மரபினர். அரசியல் அரங்கில், நீதிக்கட்சியின் மாபெருந்தலைவர் களின் மறைவாலும், பின்னர் வந்த தலைவர்களின் ஆற் றல் குறைவாலும், சில தலைவர்களின் தன்னலத்தாலும், துரோகத்தாலும், கட்சி தினசரிகள் நின்றதாலும், பிரச் சாரமின்மையாலும், மாற்றுக் கட்சியினரான காங்கிரசார்