உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 38 "எலிவளை எலி தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம் முதன் முதல் பரவத்தொடங்கியபோதுதான் களுக்கே" என்னும் கேலி மொழி பேசப்பட்டது. குறுகல் நோக்கம், சிறுமதி என்று வசை கூறப்பட்டது; பலவகை யான கண்டனங்களும் கிளம்பின. அவற்றுள், பெரும் வட்டாரங்களிலிருந்தே கிளம்பின பாலன பார்ப்பன என்பது குறிப்பிட வேண்டுவதாகும். "தமிழ் மொழி, உயர் தனிச்செம்மொழி. வடமொழிக் கலப்பு தமிழுக்கு ஆக்கமளிக்காது. தமிழர் ஒரு தனி இனத்தவர், பண்டைப் பெருமையுடையவர். தமிழர் கலை நாகரிகத்தைப் பாதுகாப்பது இன்றியமையா த தாகும். அதற்குத் தமிழ் நாடு தனி ஆட்சி எய்தவேண்டும் ” என்பன முதலான கருத்துக்களை எடுத்துக் கூறுவதே பார்ப்பனர்களுக்கு வேம்பாயிற்று வெறுப்புரைகள் கக்கினர். " தமிழ், தமிழ்நாடு, தன்னாட்சி என்றாலே, பார்ப்பனர் களுக்கு மட்டும் ஏன் கசப்பாதல் வேண்டும் ? " செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று விடுதலைக் கவி பாடினாரே, அந்தச் செந்தமிழ் நாட்டிற்குச் சுதந்திரம் என்றவுடன இந்த வீணருக்கு, வேறு எதுவோ தம் காதில் பாய்வதுபோல் தோன்றுவானேன் ? தமிழர் யார்? என்ற கேள்வியும் அதற்கு விளக்கமும் உரைக்கப்பட்ட தாலேயே அவர்கள்' உண்மையைக் கண்டு ஓலமிடலாயினர். தமிழர் ஆவார், தமிழ் மொழி யையே தாய்மொழியாக உடையவர். தமிழர் பண்பாட்டை இயல்பாகப் பெற்றவர், பெற்றவர், பிறமொழியைப் பெரிதெனப் போற்றாதவர், தமிழ்மொழிக்குக் கேடு தருவனவும், தமிழர் நெறிக்கு மாறானவுமான கொள்கையை மேற்கொள்ளாத வர். சுருக்கமாகக் கூறுவதாயின், ஆரியக் கொள்கைகளை ஏற்காதவரும், புகுத்தா தவரும், பரப்பா தவருமே தமிழர்- என்பது விளக்கி உரைக்கப்பட்டது. மேலும், தமிழராவார் திராவிடர், திராவிடர் சாதி பேதம் அற்றவர், சாதி ஆரியத்தின் சதி, சாதிக்கொரு