41 தனாலும், தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கும் நிலை எய்தியதா லும், அதை எதிர்ப்பவர்கள் பார்ப்பனர்களே எனற உண்மை தெளிவாகத் தொடங்கியதாலும், தமது இன நலத்தைக்கருதி, 'அவர்களிலே' சிலரும் ஆதரிப்பவர்களாக காட்டிக் கொண்டனர். மேலும், அவ்வியக்கம் 'பொருள்' வளத்தோடு திகழ்ந்ததால், முதலில் எதிர்த்தவர்களுங்கு ஆதரிப்பவர்களாக உள்ளே புகுந்து கொள்வதே 'இலாபம்' என்று கண்டுகொண்டனர். வெளிப்படை யான எதிர்ப்பு மறைந்தது. தமிழ் இசை ' இயக்கத்துள் யார் யாரோ, இடம் பெற்றுக்கொண்டனர். என்றாலும், மக்கள் உள்ளத்தில் தமிழிசை உணர்ச்சி நிலைத்து விட்டது. கூட, 6 அவ்வியக்கம், பழந்தமிழ்ப் பாடல்களை இசைத்துறை யின் கண்கொண்டு ஆராயவும் தூண்டியது. மற்றொரு பக்கத்தில், இசை அரங்கில் பாடப்படுவன எல்லாம் வெறும் பக்திப் பாடல்களாக் இருப்பது பயனளிக்காது; புதுமைக் கருத்துக்களைக் கொண்டனவாக, நாடு, மொழி, கலை, உழைப்பு, பெண்கள் முதலிய பல பொருள் குறித் தும் இசைப்பனவாதல் வேண்டும் என்ற கொள்கையும் சுயமரியாதை இயக்கத்தால் வலியுறுத்தப்பட்டது. அதன் பயனாகப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முத லாகப் பலரின், புதுமைப் பாடல்கள் இசை அரங்கில் இடம் பெற்றன. இன்றோ அவையே, பொதுமக்களின் உள்ளத்திற்கு விருந்தாகும் பாடல்களாக உள்ளன. அது போன்றே, தமிழ் மொழியின் உரிமைகள் பல வற்றிற்கும், கிளர்ச்சிகள் நடைபெற வேண்டியிருந்தன, இருக்கின்றன இன்று வரையில். சென்னை அரசாங்கம், தமிழர்களின் பெயருக்கு முன் பாக, மரியாதை குறிப்பாக வழங்கும் 'ஸ்ரீ' என்பதற்குப் பதிலாக, 'திரு' என்ற தமிழ்ச் சொல்லையே வழங்க வேண்டும் எனறு தமிழ்ப் பெருமக்கள் விரும்பினர்; வேண்டிக் கொண்டனர். தீர்மானங்கள் மூலம் வலியுறுத் தினர், பயனில்லை. இன்றும், தமிழில் எழுதினால் சிரிப் புக்கு இடமாகும், ஆரிய ஸ்ரீ தான் ஆட்சி புரிகிறது.
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/42
Appearance