45 மாட்டார்கள்! மற்றவர்களோ, தங்கள் மொழி கலை நாகரி கப் பண்பாட்டை, ஆரியத் தொடர்பால் அழிந்துபோய் விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதைக்கூட உணராத வர்களாகவே உள்ளனர் ! இந்நிலையில் உள்ள பொதுமக்கள், தம்மை உணர்ந்து காத்துக் கொள்ளவே இன உணர்ச்சி கொள்வது இன்றி யமையாததாகும் என்று கண்டனர், நீதிக் கட்சியார். அந்த இன உணர்ச்சியோடு செயலாற்றத் தொடங்கிய போதே, மொழி, கலை, சமுதாய எண்ணம் ஆகியவற்றில் மறுமலர்ச்சி விளையலாயிற்று. அம்மறுமலர்ச்சி மாணவர் உலகையும் கவர்ந்தது. அதுகாறும் இந்தி எதிர்ப்பு, தனித் தமிழ்ப் பாதுகாப்பு, ஆகியவற்றிலே மட்டும் ஆர்வம் கொண்டிருந்த மாணவர்கள், சுயமரியாதையோடு, திரா விட இனப்பற்றும் கொள்ளலாயினர். மாணவர்களின் அந்த எழுச்சி, இயக்கத்தின் மறுமலர்ச்சிக்குக் காரண மாக அமைந்த அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு' இதழால் ஓங்கிற்று. அண்ணாவின் எழுத்தும் பேச்சும், மாணவர்கள் பலரை இயக்கப் பணியில் ஈடுபடச் செய் தது. அக்காலத்தில் இயக்கத்தில் ஈடுபட்டவர்களே நண் பர்கள் நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், ஜனார்த் தனம், அர்ச்சுனன், தவமணி, இளம்வழுதி முதலியோரும் நானும் ஆவோம். அப்பொழுது நிகழ்ந்த மேடைப் பேச்சுக்களில், வட வர் ஆதிக்கம் கூடாதுஎன்று வலியுறுத்தப்பட்டு வந்தது. அதை ஒட்டி, வடவர் வெற்றியைச் சித்தரிக்கும் இராமா யணமும் கண்டிக்கப்படலாயிற்று. இராமாயணம், அரசிய லில் வடவர் வெற்றிக்கும், மொழி, கலைத் துறைகளில் வட மொழி ஆதிக்கத்திற்கும், சமூக நிலை விளக்கத்தில் வட வரின் உயர்வுக்கும், மதத்துறையில் ஆரியரின் ஆதிக்கத் திற்கும் - பலவாறு வழிசெய்ததை அறிந்தபோது, இராமா யணத்தை மக்கள் வெறுக்கும்படிச் செய்யவேண்டும் என் பது உறுதி பெற்றது. அதன் பயனாக 'இராமாயணத் தைக் கொளுத்துவோம் என்ற முழக்கமும் பிறந்தது. அதனால் 'வாதங்களும்' நிகழ்ந்தன. வெற்றியும் கிடைத் தது. அத்துடன், மற்ற புராணங்களும் கண்டிக்கப்பட
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/46
Appearance