47 மாற்றார். மதியிழ்ந்து மனங் கொதித்த மாற்றார், மதுரை மாநாட்டுக் கொட்டகையிலே நடுப்பகலிலே, தமது வயிற் றெரிச்சலை நெருப்பாகக் கொட்டித் தீ மூட்டினர். அவர் கள் மூட்டிய தீ, அன்று இலங்கையை அன்று இலங்கையை எரித்த தீயை நினைவூட்டிற்று. தீ, கொட்டகையைப் பொருளைத்தான் எரித்தது. அன்று இலங்கையில் மூட்டிய தீ இன்றும் மக்கள் மனத்தில் அழியா த நெருப்பாக இருப்பது போலத் தான், மதுரைத் தீயும் மக்கள் மனத்தினின்றும் மறைய வில்லை. மக்கள் மனத்தில் கிடந்த தன்னுணர்வுக் கொள் கைகள், தணலில் இட்ட தங்கமாயின, சுடச்சுட ஒளி சிறந் தன அவர்கள் மூட்டிய தீ, கருஞ்சட்டையை எரித்தது எனினும் தோழர்களின் உடலையே தீய்த்துக் கருப் பாக்கி விட்டது, அடையாளமே தேவை யில்லா தபடி. கொள்கை உரம் வளர்ந்தது. தீயோரின் தீயினால் தீய்ந்து விடவில்லை. 1 வைதீக வெறியும், தேசீய மயக்கமும் விளைவித்த இன்னல்கள் பலப்பல. கல்லும், கம்பும், கடப்பாறையும் கட்கமும், சோடாபாட்டிலும், திராவகமும், மரமும் குளமும் இருளும் மறைப்பும், சதியும் சூழ்ச்சியும், காலியும் கூலியும் ஆகிய பலவும், கைக்கொள்ளப் பட்டன வளரும் கிளர்ச் சியை ஒடுக்க. அவற்றிற்காளாகிக் கண்ணிழந்து குருடா னோர், காலொடிந்து கொண்டியானோர், கையிழந்து முட மானோர், செவிடானோர். ஊனமானோர் பலர். வாழ்க்கை நலம் கெட்டவரும், பொருள் இழந்தவரும் பலப்பலர். உயிர் இழந்த உத்தமரும் உளர். உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் அவர்களின் உயிரையே உறிஞ் சினர் அக்கொடியோர். எனினும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது உரிமை உணர்ச்சி. அப்படிப்பட்ட காலத்தில்தான். புதிய கட்சி ஏடுகள் பெருகின. இயக்கக் கொள்கை களிலே பல, மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டன. புதிய பேச்சாளர்களும் எழுத்தாளர்களும், கலைஞரும், நடிகரும், ஆசிரியர்களும், மாணவர்களும் எனப் பல திறத்தினரும் இயக்கத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் எல்லோரையும் குறிப்பிடுவது எளிதுமல்ல, இயல்வ துமல்ல. அவர்களுள் இன்றும் சிறப்
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/48
Appearance