உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை அன்புடையீர்! தோழர் அன்பழகன் அவர்கள் 'கிளர்ச்சி' மலரில் எழுதி வெளியிட்ட "வளரும் கிளர்ச்சி" என்ற கட்டுரையை வெளியிடக் கருதினோம். அது மிகவும் சுருக்கமாக இருப் பதால் விரித்து எழுதினால்தான் பயன் மிகும் என்று கருதினார் அவர். அவ்வாறே, நமது இலட்சிய வளர்ச்சியை, எவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி, தக்க விளக்கங்க ளோடு விரிவாக எழுதியுள்ளார் இதனை. அவரது சொற்பொழிவில், பலவிடங்களில் கூறப் பட்டவை இதில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. திராவிட இனத்தின் விடுதலை முழக்கத்தின் சுருக்கமான வரலாறு என்றே இதனைக் கூறலாம். திராவிட மக்கள் ஒவ்வொரு வரும் இதனைப் படித்து உணர விரும்புகிறோம் ! புதுவாழ்வுப் பதிப்பகத்தின் இரண்டாவது வெளி யீடாக, இதனை வெளியிடும்படி அளித்த தோழர் க.அன்பழகன் எம்.ஏ. அவர்கட்கு நன்றி உரித்து. பதிப்பகத்தார்.