50 1948-அக்டோபரில், அறிஞர் அண்ணா தலைமையில், ஈரோட்டில் ஒரு சிறப்பு மாநாடு சிறப்பு மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில், தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் 'இன்னும் 10-ஆண்டுகளில் திராவிடநாட்டை அடைந்தே தீருவோம்" என்று முழங்கி, விளக்கங்கள் பல கூறித் திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைத்தார். அதனால் திராவிடநாடு இலட்சியம், மாற்றுக்கட்சியினரின் மதிப்பையும் பெற்றது எனலாம். அதற்கு முன்பே 1947-ல் கடலூரில் நடைபெற்ற மாநாட்டிலும் தமிழ்ப் பெரியார் அவர்கள், திராவிட நாட்டு உரிமையை, பிரி வினையை ஆதரித்தார்கள். அம்மாநாட்டில், வகுப்புரி மைத் தந்தை S.முத்தையா அவர்களும் திராவிடத்தின் விடு தலையை வலியுறுத்தினார்கள். இவ்வாறு இயக்கமும் இலட்சியமும், நாட்டுப் பெரியோர்கள், நல்லறிஞர் நாவலர் ஆகியோரின் ஆதரவைப் பெற்று வளரலாயிற்று. இந்நிலையில் தான், 33 திராவிடத் தந்தை பெரியார் அவர்கள், எவரும் எதிர்பார்த்திருக்க முடியா த ஒரு புது முறை "ஏ ற்பாடடை அந்தரங்க நண்பர் ஆச்சாரியார் ஆலோசனையும் பெற்று நிறைவேற்றினார். பொ துமக்கள் கேலிக்கு முன், இயக்கத் தோழர்கள் தலை கவிழும் நிலை பிறந்தது. மனக்கொதிப்பு கண்ணீராகச் சிந்தியது. உயர்ந்த கோபுரத்தில் இருந்து உருண்டுவிழும் நிலைக்கு ஆளாகியது கழகம். கண்ணீரைச் சிந்தியோர், தலைவருக்கு வேண்டுகோள் விட்டும் பயன்படவில்லை. மாறாக, வசையும் பழியுமே கிளம்பலாயிற்று. எனவே, எவ்வகையாக நோக் கினும், (உண்மைத்) தொண்டர்கள் தலைவரைவிட்டு விலகு வதைத் தவிர்த்து வேறுவழி தோன்றவில்லை. எனவே கண்ணியர்கள் ஒன்றுகூடி, அறிஞர் அண்ணா வையே வழிகாட்டியாக இருக்கக் கேட்டு, தனி அமைப்பு காணலாயினர். அண்ணாவோ, கடமையைக் கருத்தி லிறுத்தி, இளைஞர்களை ஆத்திரம் கொள்ளாமல் தடுத்து அறிவுப்பாதை காட்டி, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கவசம் அளித்து, திராவிடர்தொண்டுப்படை இடையிலே தளர்ந்து அழிந்துவிடாமல், இலட்சியம் நோக்கி நடக்கச் செய்தார். படை, பரணி பாடியபடி நடக்கிறது இந்நாள். தான,
பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/51
Appearance