உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளரும் கிளர்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V211, 4N46 55 N53 கோள், இடையில் பெரியாரின் உழைப்பில் மலர்ந்த கொள்கை, இன்று அண்ணாவின் அறிவாற்றலில் மணம் மிக்க திட்டமாகத் திகழ்கிறது. காங்கிரஸின் தேச விடுதலை, நீதிக்கட்சியின் வகுப் புரிமை, தாய்மொழிப் பாதுகாப்பு, திராவிட இன உரிமை, திராவிடநாட்டு விடுதலை, பொருளாதார பேத நீக்கம் ஆகிய ஒவ்வொன்றும், காலமுறையிலேயே மக்களிடை இடம் பெற்று வந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் முதலில் சிறு சிறு கிளர்ச்சியாகவே தோன்றி வளர்ந்துள் ளன. இவற்றுள் பல, ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, தனித்தனி பிரிக்க முடியா த ஒரு பெரு வடிவ மாகத் திகழ்வதையும் அறிவது கடினமல்ல. அந்தப் பெருவடிவே, பேரிலட்சியமே, திராவிடநாடு திராவிட ருக்கே என்பது. சிறு பொறி-பெருந் தீயாகி விட்டது. அணைந்து விடுமோ என்று எண்ணிய சிறு விளக்கு, இன்று பெருஞ்சுடராகிப் பேரொளி பரப்புகிறது. 66 அந்த இலட்சிய ஒளி நோக்கியே, பலப்பல கிளர்ச்சி களும் நடைபெற்றபடி உள்ளன. தியாகப் பண்பும் வளர் கிறது. தொண்டுள்ளம் பூண்டோர் பெருகியபடி உள்ளனர். ஓயாது, - எனவே தான், எரிகிற அடுப்பில் ஏற்றிய பால் என, னவுணர்வுப்பால் பொங்கும் திராவிடத்தில், திராவிட நாடு திராவிடருக்கு ஆகும் வரையில், இந்தக் கிளர்ச்சி உறங்காது, ஒதுங்காது, சாகாது, மாறாக எங்கும் பரவிப் பொங்கி வளரும்- வளரும் கிளர்ச்சியாகவே வாழும் எனக் கூறுகிறேன் ! ஆம்! இது கிளர்ச்சி' ! தளராது, தயங்காது "வளரும் கிளர்ச்சி"! என் எல்லோரும், எத்திறத்தினரும் உணர பதைத்தான் வேண்டுமென விரும்புகிறேன்! வளரும் வளர்க கிளர்ச்சி ! வாழ்க திராவிடா!! 110268