பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றுக்கு முன்னால்


வளைந்த கோல் ஒன்றினால் பந்தினைத் தட்டியும், அணைத்தும் அடித்தும், ஒதுக்கியும் உருட்டியும் ஆடிய தால் தான் இந்த ஆட்டம், வளைகோல் பந்தாட்டம் என்று பெயர் பெறலாயிற்று.

மனித இனத்தின் வரலாறு போலவே, வளைகோல் பந்தாட்டம் மிகவும் பழமையானது என்பர் ஆராய்ச்சியாளர்கள். இதன் தோற்றத்திற்கும் தொடக்கத்திற்கும் இதுவரை எந்த ஆதாரமும் சான்றும் யாருக்கும் கிடைக்கவில்லை. எங்கள் நாட்டிலே இப்படி ஒரு ஆட்டம் இருந்தது' என்று எல்லா நாட்டினரும் சொந்தம் கொண்டாட முயன்றாலும், இப்படித்தான் ஆடினார்கள், இவ்வாறுதான் விதிகள் இருந்தன, என்று யாராலுமே தெளிவாக உறுதியாகக் கூறமுடியவில்லை..

வளைகோல் பந்தாட்டத்தின் தோற்றத்தைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து முயல்வோமானால், ஆதிகால மக்களின் அச்சமிகுந்த வாழ்க்கையைத்தான் முதலில் நாம் ஆராயவேண்டியிருக்கிறது. அங்கிருந்து தான் பல ஆதாரபூர்வமான நிகழ்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொகுத்துத் தருகின்றார்கள்.