பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

வேட்டையாடுதல் போன்றவற்றில் பெற்றிருந்த தொடங்கின.

உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள, மனதை. மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள, ஏதாவது ஒரு புதிய பொழுது போக்கு அவர்களுக்குத் தேவைப்பட்டது.

மிருகங்களை நோக்கி அவர்கள் எறிந்த கல் கீழே விழுந்து உருண்டு ஓடியதும்,மரத்தில் இருந்து விழுந்த பழங்கள், மேட்டிலிருந்து பள்ளத்திற்கு நகர்ந்து ஓடியதும், அவர்களை அதிகம் கவாந்திழுத்து விட்டது போலும்.

அவைகளைப் போலவே, தாங்களும் கீழே விழுந்த பழங்களை எடுத்து வைத்து உருண்டோடச் செய்தனர். உருண்டையான கூழாங்கற்களை பொறுக்கி எடுத்து. உருட்டி ஓடச் செய்தனர். கற்களும் பழங்களும் ஓடாமல் நின்றபொழுது,கை விரல்களால் அவைகளைத் தள்ளி ஒடச்செய்து மகிழ்ந்தனர்.

எத்தனை நாள்தான் விரல்களாலே தள்ளி ஓடச் செய்ய முடியும்? விரல்களுக்குப் பதிலாக, அருகில் கிடந்த குச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டனர். கற்களும் பழங்களும் அளவில் பெரியனவாக மாறிக் கொண்டுபோகப் போக, தள்ளப்பயன்பட்ட குச்சிகளும் உருவத்திலும் வடிவத்திலும் பெரிதாகின.

நேராக இருந்த குச்சிகளாலும், தடிகளாலும் அவைகளை நன்றாக தள்ள முடியவில்லை என்பதால், தள்ளும்,


ஃ பந்து எவ்வளவு பிறந்தது என்பதற்கு ஆசிரியர் எழுதிய விளையாட்டுக்களில் விநோதங்கள் என்ற நூலில் காண்க.